Home நாடு தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் டோல் கட்டணங்கள் இலவசம்

தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் டோல் கட்டணங்கள் இலவசம்

334
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தீபாவளிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள நெடுஞ்சாலைகளில் சனிக்கிழமை, நவம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 12 ஆகிய இரு நாட்களில் சாலைக் கட்டணம் – டோல் – வசூலிக்கப்படாது.

இதற்கான முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதாகவும் பொதுப் பணித் துறை அமைச்சும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள டோல் சாவடிகளைத் தவிர்த்து மற்ற அனைத்து டோல் சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது.

#TamilSchoolmychoice

சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதும் இந்த முடிவின் முக்கிய நோக்கமாகும்.