Home நாடு இராமசாமி, தமிழர் குரல் இயக்கம் மூலம் திரட்டிய 1,520,000 ரிங்கிட் வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டது

இராமசாமி, தமிழர் குரல் இயக்கம் மூலம் திரட்டிய 1,520,000 ரிங்கிட் வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டது

466
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : சாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கில் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி 1,520,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து இராமசாமிக்கு ஆதரவாக அந்த நிதியைத் திரட்டும் முயற்சியை தமிழர் குரல் இயக்கம் தொடங்கியது. தினமும் திரட்டப்பட்ட தொகை இராமசாமியின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

வியாழக்கிழமை (நவம்பர் 10) காலையில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கான இலக்கை விட 3 ஆயிரம் ரிங்கிட் கூடுதலாக சேர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து 1,520,000 ரிங்கிட்டுக்கான காசோலையை இராமசாமி தன் வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்தார்.

வழக்கின் மேல்முறையீடு தொடரவிருக்கும் நிலையில் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் அந்தப் பணம் வழக்கறிஞர்களின் வசம் இருந்து வரும். இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பாக அந்தப் பணத்தை எந்தத் தரப்புக்கோ – சாகிர் நாயக் அறிவித்தபடி பாலஸ்தீன மக்களின் நலன்களுக்காகவோ வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இராமசாமிக்கு ஆதரவாக ஒன்று திரண்டு ஒற்றுமையாக இருந்து இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டிக் கொடுத்த மக்களுக்கு இராமசாமி தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.