Home நாடு சாகிர் நாயக்கிற்கு 1.52 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க இராமசாமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சாகிர் நாயக்கிற்கு 1.52 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க இராமசாமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

411
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தனியார் மதபோதகர் டாக்டர் சாகிர் நாயக் முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமிக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில், 1.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகையை இராமசாமி அவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 2) தீர்ப்பளித்தது.

சாகிர் நாயக் இராமசாமி மீது 2 வழக்குகளைத் தொடுத்திருந்தார். முதலாவது வழக்கு அக்டோபர் 2019-ஆம் ஆண்டிலும், இரண்டாவது வழக்கு அதே ஆண்டில் டிசம்பர் மாதத்திலும் இராமசாமி மீது தொடுக்கப்பட்டது.

இரண்டு வழக்குகளிலும் இராமசாமி அடுத்த 30 நாட்களுக்குள் நீதிமன்றம் நிர்ணயித்த 1.5 மில்லியன் ரிங்கிட்டை செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஹாயாதுல் அக்மால் அப்துல் அசிஸ் தீர்ப்பளித்தார்.