Home நாடு சைட் சாதிக் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு – மூடா எதிர்காலம் கேள்விக் குறியா?

சைட் சாதிக் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு – மூடா எதிர்காலம் கேள்விக் குறியா?

763
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் மீது 1.12 மதிப்புடைய பெர்சாத்து கட்சிப் பணம் மீதிலான நம்பிக்கை மோசடி, பணி மோசடி, கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பிலான 4 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூடா கட்சியின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சைட் சாதிக்கிற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படிகளும், 10 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

சைட் சாதிக் உடனடியாக கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக கட்சியின் துணைத் தலைவர் அமிரா ஆயிஷா அப்துல் அசிஸ் இடைக்காலத்திற்கு மூடா கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகிப்பார். சைட் சாதிக் தலைமை இல்லாததால் – அவர் மீதான தண்டனை நீடிப்பதால் – மூடா கட்சி மீண்டும் இளைஞர்களிடையே செல்வாக்கையும் வரவேற்பையும் பெற முடியுமா என்ற ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

எனினும் சைட் சாதிக் மூவார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வார்.

இதற்கிடையில் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக சைட் சாதிக் மேல்முறையீட்டையும் சமர்ப்பித்துள்ளார்.

அரசு தரப்பு வாதங்களுக்கு எதிராக நியாயமான ஐயப்பாடுகளை எழுப்ப மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான 30 வயதான சைட் சாதிக் தவறி விட்டார் என்றும் நீதிபதி அசார் அப்துல் ஹாமிட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.