Home நாடு சைட் சாதிக் குற்றவாளியே! நீதிமன்றம் தீர்ப்பு!

சைட் சாதிக் குற்றவாளியே! நீதிமன்றம் தீர்ப்பு!

477
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் மீது 1.12 மதிப்புடைய பெர்சாத்து கட்சிப் பணம் மீதிலான நம்பிக்கை மோசடி, பணி மோசடி, கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பிலான 4 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

அரசு தரப்பு முன்வைத்த வாதங்களின் அடிப்படையில் குற்றங்கள் நிரூபணமாகியுள்ளன என்றும் அந்தக் குற்றச்சாட்டுகளின் மீது நியாயமான ஐயப்பாடுகளை எழுப்ப மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான சைட் சாதிக் தவறி விட்டார் என்றும் நீதிபதி அசார் அப்துல் ஹாமிட் தீர்ப்பளித்தார்.

30 வயதான சைட் சாதிக் அதிக பட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் ஆகியவற்றை எதிர்நோக்கக் கூடும்.

#TamilSchoolmychoice

நீதிமன்றம் இன்னும் தண்டனையை அறிவிக்கவில்லை.

மூடா கட்சியின் தலைவருமான சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் மீது சுமத்தப்பட்டிருந்த பணம் கையாடல் தொடர்பிலான வழக்கில் அவர் எதிர்வாதம் செய்ய வேண்டுமென நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு, தற்காப்பு தரப்பு வாதங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

சைட் சாதிக்கிற்கு எத்தகைய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற வாதங்கள் இனி நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும்.