Home நாடு 6 நெடுஞ்சாலைகளின் கட்டண வரி குறைக்கப்படும்

6 நெடுஞ்சாலைகளின் கட்டண வரி குறைக்கப்படும்

730
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : அடுத்த 3 மாதங்களில் கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் 6 நெடுஞ்சாலைகளுக்கான கட்டண வரிகள் குறைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருக்கிறார்.

பொதுத் தேர்தலுக்கான சலுகை அறிவிப்பாக இது பார்க்கப்படுகிறது.

அம்பாங்-கோலாலம்பூர் இடையிலான அக்லே (Akleh) நெடுஞ்சாலையின் கட்டண வரி, அக்டோபர் 20 முதல் குறைக்கப்படும். கத்ரி நெடுஞ்சாலை, கெமுனிங்-ஷா ஆலாம் நெடுஞ்சாலை, சில்க் ரோட் எனப்படும் காஜாங் நெடுஞ்சாலை ஆகியவைக்கான கட்டணங்களும் அக்டோபர் 20 முதல் குறைக்கப்படும்.

#TamilSchoolmychoice

2-வது கட்டமாக, 2023, ஜனவரி 1 முதல் காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை, சுங்கை பீசி நெடுஞ்சாலை (பெஸ்ராயா) ஆகியவைக்கான கட்டணங்கள் குறைக்கப்படும்.

டாமன்சாரா – ஷா ஆலாம் நெடுஞ்சாலையை இன்று வியாழக்கிழமை திறந்து வைத்தபோது இஸ்மாயில் சாப்ரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.