Home நாடு இஸ்மாயில் சாப்ரி 10-வது முறையாக ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்!

இஸ்மாயில் சாப்ரி 10-வது முறையாக ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்!

73
0
SHARE
Ad
இஸ்மாயில் சாப்ரி

புத்ரா ஜெயா: ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி இன்று புதன்கிழமை (மே 7) 10-வது முறையாக வாக்குமூலம் வழங்க இங்குள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்தார்.

கள்ளப் பணப் பரிமாற்றம், ஊழல் ஆகிய புகார்களின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்படுகிறார்.

இன்று காலை 10.54 மணியளவில் அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு வந்தார். ஆகக் கடைசியாக ஏப்ரல் 25-ஆம் தேதி வாக்குமூலம் வழங்க வந்த அவர் சுமார் 7 மணி நேரம் தன் வாக்குமூலத்தை வழங்கினார்.

#TamilSchoolmychoice

இதுவரையில் இஸ்மாயில் சாப்ரி மீதான விசாரணைகள் 10 முதல் 20 விழுக்காடு வரையில் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 2021 தொடங்கி நவம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் பிரதமராக இருந்தபோது ‘கெலுவார்கா மலேசியா’ – மலேசியக் குடும்பம் – என்ற சித்தாந்தத்தை விளம்பரப்படுத்த மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் ஊழல்கள், கள்ளப் பணப் பரிமாற்றங்கள் நிகழ்ந்ததன் அடிப்படையில் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை முடுக்கி விட்டுள்ளது.

கடந்த மார்ச் 3-ஆம் தேதி இல்லம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 170 மில்லியன் மதிப்பிலான அயல்நாட்டு நாணயங்கள் உள்ளிட்ட ரொக்கப் பணம், 16 தங்கப் பாளங்கள், கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் இஸ்மாயில் சாப்ரி மீதான விசாரணைகளை ஊழல் தடுப்பு ஆணையம் தொடங்கியது.

இதுவரையில் பல அரசியல்வாதிகள் உள்ளிட்ட 31 தனிநபர்கள் இந்த விவகாரத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களின் அடையாளங்களை ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரை வெளியிடவில்லை.