Home நாடு கோவிட் -19 அதிகரிப்பு : மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு இல்லை

கோவிட் -19 அதிகரிப்பு : மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு இல்லை

323
0
SHARE
Ad

புத்ராஜெயா – கடந்த வாரம் கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை 62.2 விழுக்காடு அதிகரித்ததால் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (எம்சிஓ) கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும் புதிதாக சுகாதார அமைச்சராகத் தேர்வாகியுள்ள டத்தோஸ்ரீ சுல்கிப்ளி அகமட், மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் இல்லை என அறிவித்துள்ளார்.

இருப்பினும், கோவிட் -19 நோய் தொற்று பரவாமல் இருக்க சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“மலேசியா தற்போது கோவிட் -19 தொற்றுகளின் திடீர் அதிகரிப்பை எதிர்கொள்கிறது. தொற்றுநோயின் தொடக்கத்தில் ஏற்பட்ட எம்சிஓ போன்ற நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளாமல் இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்று சுகாதார அமைச்சகம் நம்புகிறது” எனவும் சுல்கிப்ளி தெரிவித்தார்.