Home இந்தியா தமிழ் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம் – மோடியைச் சந்திக்கச் செல்கிறார் ஸ்டாலின்

தமிழ் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம் – மோடியைச் சந்திக்கச் செல்கிறார் ஸ்டாலின்

340
0
SHARE
Ad

சென்னை : இந்த மாதத் தொடக்கத்தில் சென்னையையும், தமிழ் நாட்டின் சில பகுதிகளையும் பரட்டிப் போட்ட கனமழை இப்போது தென் மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் பொதுமக்களும், போக்குவரத்தும், விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து தன் முகநூலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்வருமாறு பதிவிட்டார்:

அதி கனமழையால் அல்லலுறும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, எற்கனவே களப்பணியில் ஈடுபட்டுள்ள மாண்புமிகு அமைச்சர்கள், Kkssr Ramachandran, Thangam Thenarasu – தங்கம் தென்னரசு, Geetha Jeevan MLA – DMK, Anitha R Radhakrishnan MLA, Mano Thangaraj மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் Kanimozhi Karunanidhi, Gnanathiraviam S MP ஆகியோருடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் உதவிட அமைச்சர்கள் E.V Velu, Udhayanidhi Stalin, R S Rajakannappan மற்றும் பி.மூர்த்தி ஆகியோரைக் கூடுதலாக நியமித்துள்ளேன்.
உதவி தேவைப்படும் பொதுமக்கள் 8148539914 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், https://x.com/tn_rescuerelief என்ற எக்ஸ் தள முகவரியிலும் தொடர்புகொள்ளவும்.

மோடியைச் சந்திக்கச் செல்லும் ஸ்டாலின்

#TamilSchoolmychoice

மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளதால் தமிழக தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதன் காரணமாக, மழை வெள்ள பாதிப்பு குறித்து பிரதமரிடம் விளக்குவதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் தமிழக தென் மாவட்டங்களில், சாலைகள், ரயில் தண்டவாளங்கள் சிதைந்துள்ளன.

கோவையில் இருந்து டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.