Home நாடு “சபா மருத்துவர் மரணம் குறித்து விசாரணை நடத்துங்கள்” – செனட்டர் லிங்கேஸ்வரன் கோரிக்கை

“சபா மருத்துவர் மரணம் குறித்து விசாரணை நடத்துங்கள்” – செனட்டர் லிங்கேஸ்வரன் கோரிக்கை

112
0
SHARE
Ad
செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் அருணாசலம்

ஜோர்ஜ்டவுன் : சபா மாநிலத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் மரணமடைந்த மருத்துவர் ஒருவரின் மரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் அருணாசலம் கோரிக்கை விடுத்தார்.

“சபாவில் எதிர்கால நம்பிக்கைகளைக் கொண்டிருந்த ஒரு மருத்துவ நிபுணரின் மரணம் குறித்து படித்தபோது மன வேதனையும் மனச்சோர்வும் அடைந்தேன். சில ஆண்டுகளுக்கு முன், முந்தைய அரசு நிர்வாகத்தின் கீழ், மருத்துவர்கள் மீதான துன்புறுத்தல் அச்சுறுத்தலை ஒழிக்க, இந்தப் பிரச்சனையின் அடிப்படைக் காரணங்களைக் கண்டுபிடிக்க, சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைகளை நடத்த ஒரு குழு பணியமர்த்தப்பட்டது. அந்தக் குழுவின் கண்டுபிடிப்புகள் என்னவாயின? நாட்டின் மருத்துவ சேவை அமைப்பிற்குள் துன்புறுத்தல் சம்பவங்களை சமாளிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? கவலைக்குரிய இந்த விஷயதை முறையாக செயல்படுத்துவதற்கு முன் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? ” என்றும் லிங்கேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

“இதுவே, உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் என்றால் அல்லது நம் அன்புக்குரியவர் என்றால், நாம் வெறுமனே அனுதாபச் செய்திகளை அனுப்பிக்கொண்டு சும்மா இருப்போமா?” என்றும் கேள்வியெழுப்பிய அவர், “நாம் தோல்வியடைந்துவிட்டோம். சுகாதார அமைச்சில் உள்ள நமது அரசு ஊழியர்களை கவனிக்காமல் விட்டுவிட்டோம்” என தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

“இதை எழுதும்போதே நான் உள்ளுக்குள் அழுகிறேன். இது ஏன் இன்னும் நடக்க வேண்டும்? முன்பே நாம் சிறந்த முறையில் செயல்பட்டு இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். அதைத் தவறவிட்டு விட்டோம். இனியாவது உடனடியாவது செயல்படுவோம். அதற்கான  சிறந்த நேரம் இப்போதுதான்” என்றும் லிங்கேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

எனவே, சுகாதாரத்துறை அமைச்சர், அமைச்சின் தலைமை இயக்குநர், மற்றும் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் ஆகியோரை உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் வலியுறுத்தினார்.

“நம் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நமது மலேசியக் குடும்பத்தை ஏமாற்றிவிடாதீர்கள்! துன்புறுத்தலால் ஏற்படும் ஒரு மரணத்தைக் கூடநம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் லிங்கேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.