Home நாடு பிகேஆர் கட்சியின் புதிய தலைமைச் செயலாளர் பூசியா சாலே! சைபுடின் நசுத்தியோன் மாற்றம்!

பிகேஆர் கட்சியின் புதிய தலைமைச் செயலாளர் பூசியா சாலே! சைபுடின் நசுத்தியோன் மாற்றம்!

159
0
SHARE
Ad
பூசியா சாலே

பெட்டாலிங் ஜெயா: பிகேஆர் கட்சியின் நடப்பு தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக பூசியா சாலே நியமிக்கப்பட்டுள்ளார். சைபுடின் உள்துறை அமைச்சருமாவார். எனினும் சைபுடின் தொடர்ந்து பக்காத்தான் ஹாரப்பான் தலைமைச் செயலாளராகவும், பிகேஆர் கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினர்களில் ஒருவராகவும், ஒற்றுமை அரசாங்க ஆலோசனை செயலகத்தின் உறுப்பினர்களில் ஒருவராகவும் தனது நடப்பு பணிகளில் தொடர்வார்.

இந்த விவரங்களை பிகேஆர் கட்சியின் நிக் நாஸ்மி நிக் அகமட் அறிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் இந்த மாற்றங்களுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியின் புதிய தலைமைச் செயலாளராகப் பங்கேற்கும் பூசியா சாலே, ஏற்கனவே பகாங் மாநில பிகேஆர் தலைவராகப் பணியாற்றி வந்தார். அந்தப் பொறுப்பை இனி ரிசால் ஜாமீன் ஏற்றுக் கொள்வார்.

பேராக் மாநிலத்தின் பிகேஆர் தலைவராக முகமட் ஹாய்ருல் அமிர் சாப்ரி, நடப்புத் தலைவர் சாங் லீ காங்கிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். சாங் லீ காங் தொடர்ந்து பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராக இருப்பார்.

பிகேஆர் தலைமைத்துவ மன்றம், நிர்வாகக் குழு ஒன்றையும் நியமித்துள்ளதாக நிக் நாஸ்மி தெரிவித்தார். அந்த நிர்வாகக் குழுவுக்கு சைபுடின் நசுத்தியோன் ஆலோசகராக இருப்பார். அந்தக் குழுவில் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார், பூசியா சாலே, தலைமைப் பொருளாளர் வில்லியம் லியோங், இளைஞர் பகுதித் துணைத் தலைவர் காமில் முனிம், மகளிர் பிரிவின் துணைத் தலைவி ஜூவாரியா சுல்கிப்ளி ஆகியோரும் இடம் பெற்றிருப்பர்.