Home நாடு நாடாளுமன்ற உணவகத்தை ‘அசுத்தம்’ காரணமாக, சுகாதார இலாகா மூடியது

நாடாளுமன்ற உணவகத்தை ‘அசுத்தம்’ காரணமாக, சுகாதார இலாகா மூடியது

202
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடு முழுக்க உணவகங்கள் மீது பரிசோதனைகள் நடத்துவது சுகாதார இலாகாவின் வழக்கமான நடைமுறையாகும்.

அவ்வாறு பரிசோதனைகள் நடத்தும்போது உணவகங்கள் அசுத்தமாக இருந்தால், நடைமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்படாமல் இருந்தால், அந்த உணவகங்களை இடைக்காலத்திற்கு மூடுவது சுகாதார இலாகாவின் வழக்கமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

ஆனால், நமது நாட்டின் நாடாளுமன்ற வளாகத்திலேயே நடத்தப்படும் உணவகம் அசுத்தம் காரணமாக மூடப்பட்ட அதிசயம் இன்று புதன்கிழமை (நவம்பர் 13) நடந்தேறியது. அந்த உணவகத்தைப் பரிசோதித்த கோலாலம்பூர்-புத்ரா ஜெயா சுகாதார இலாகாவினர், அசுத்தங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக அடுத்த 2 வாரங்களுக்கு அந்த உணவகத்தை மூடுமாறு உத்தரவிட்டனர்.

#TamilSchoolmychoice

பாக் தாம் ரெஸ்டாரண்ட் என்ற நிறுவனத்தால் அந்த உணவகம் நிர்வகிக்கப்படுகிறது.