Home உலகம் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா!

ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா!

924
0
SHARE
Ad

வாஷிங்டன் : கொரொனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்ததாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.  அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார் என அதிபரின் மருத்துவர் கெவின் ஓகானர் தெரிவித்தார்.

ஆனால், அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அலுவல் பணிக்கு திரும்பிய மூன்றே நாட்களில் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிகுறிகள் ஏதுமற்ற கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

79 வயதான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மீண்டும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார்.

அறிகுறிகள் ஏதும் இல்லை என்றாலும், தமது சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களின் நலன் கருதி தாம் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாகவும் பைடன் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஐந்து நாட்களுக்கு பைடன் தனிமைப்படுத்திக் கொண்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) எடுக்கப்பட்ட சோதனையில் பைடனுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.