Home உலகம் ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று

ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று

598
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் -19 தொற்று கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோவிட் தொடர்பான லேசான அறிகுறிகள் இருந்தபோதிலும் வெள்ளை மாளிகையில் தனிமையில் இருக்கும்போது தொடர்ந்து அவர் பணியாற்றுவார்.

டுவிட்டரில் வெளியிடப்பட்ட ஒரு காணொலியில் பிடென் அமெரிக்கர்களிடம் அவர் தான் நன்றாக இருப்பதாகவும் எனினும் கோவிட் அறிகுறிகள் தொடர்ந்து லேசாக இருப்பதாகவும் கூறினார்.

“இன்று காலை நான் கோவிட் நோய்த் தொற்று சோதனை செய்ததாக நீங்கள் கேள்விப்பட்டீர்கள் என்று நினைக்கிறேன். தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. எனக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டது. அறிகுறிகள் லேசானவை, உங்கள் விசாரணைகளையும் கவலைகளையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். ஆனால் நான் நன்றாக இருக்கிறேன். நிறைய வேலைகளைச் செய்து வருகிறேன். அதைத் தொடர்ந்து செய்து முடிக்கப் போகிறேன், இதற்கிடையில், உங்கள் அக்கறைக்கு நன்றி” என்று பைடன் தனது செய்தியில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice