Home நாடு ஜோ லோவுக்கு உடந்தையாகப் பணியாற்றிய அபாண்டி மீது நடவடிக்கை – மகாதீர் கோரிக்கை

ஜோ லோவுக்கு உடந்தையாகப் பணியாற்றிய அபாண்டி மீது நடவடிக்கை – மகாதீர் கோரிக்கை

573
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 1எம்பிடி விவகாரத்தில் தப்பியோடி தலைமறைவாக இருக்கும் ஜோ லோவுடனான தொடர்புகள் குறித்து முன்னாள் சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) அபாண்டி அலியை விசாரிக்க வேண்டுமென  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், வலியுறுத்தியுள்ளார்.

மலேசிய அதிகாரிகளுடனான விவாதங்களில் லோவை பிரதிநிதித்துவப் படுத்தியதாக அபாண்டி ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கையை மகாதீர் விடுத்துள்ளார்.

அபாண்டி, 1எம்டிபி மீதான விசாரணைகள் தொடர்பாக சட்டத் துறைத் தலைவராக அவர் பணியாற்றியதில் சந்தேகம் இருப்பதாக மகாதீர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“அபாண்டி அட்டர்னி ஜெனரலாக இருந்த காலத்திலிருந்தே லோவுடன் ஒத்துழைத்து வந்தாரா என்ற சந்தேகத்தை இது உருவாக்குகிறது. லோவுடனான நட்புறவின் காரணமாக கடந்த காலத்தில் 1எம்டிபி மீதான விசாரணைகளை மூடிவிட முடிவு செய்தாரா என்பது குறித்து அபாண்டி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். 1எம்டிபி விவகாரத்தில் அபாண்டியும் ஜோ லோவும் கூட்டாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதற்கான கூறுகள் இருப்பதால், விசாரணைக்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது” என்று மகாதீர் கூறினார்.

ஜனவரி 26, 2016 அன்று, அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட மாட்டாது என்று அபாண்டி ஒரு செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

அந்த நேரத்தில், நஜிப் 1எம்டிபியில் இருந்து 2.6 பில்லியன் ரிங்கிட் மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தில்  இருந்து 42 மில்லியன் ரிங்கிட்டையும் முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற புகார்கள் எழுந்தன.

2018 இல் அபாண்டி சட்டத் துறைத் தலைவராக மாற்றப்பட்ட பிறகு நஜிப் மீது மேற்கூறப்பட்ட புகார்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.