Home இந்தியா திரௌபதி முர்மு : இந்தியாவின் புதிய அதிபருக்கு மோடி வாழ்த்து

திரௌபதி முர்மு : இந்தியாவின் புதிய அதிபருக்கு மோடி வாழ்த்து

781
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியாவின் புதிய அதிபராக ராம் நாத் கோவிந்த்துக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

ஜூலை 18-ஆம் தேதி நடைபெற்ற இந்திய அதிபருக்கான தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்முவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். அந்தத் தேர்தலுக்கான முடிவுகள் வியாழக்கிழமை (ஜூலை 21) வெளியிடப்பட்டன.

இந்தப் போட்டியில் திரௌபதி வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று திரௌபதிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருடன் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உடனிருந்தார்.