Home கலை உலகம் ஆஸ்ட்ரோ: ஆகஸ்ட் மாத நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ: ஆகஸ்ட் மாத நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

404
0
SHARE
Ad

ஆகஸ்ட் 2022 முதல் ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்
உப்புரொட்டி சிதம்பரம் தொடர்

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 9.30 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நதியா ஜெயபாலன், கபில் கணேசன், தாஷா கிருஷ்ணகுமார், கே. குணசேகரன், கோமள நாயுடு & கவிதா
பணத்தைத் திருடியதாக அன்பின் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

டயல் 100 (Dial 100)

டயல் 100 (Dial 100) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: மனோஜ் பாஜ்பாய், நீனா குப்தா & சாக்ஷி தன்வார்
ஓர் இரவு வேலையில், மும்பைப் போலீஸ் அவசர அழைப்பு மையத்தில் பணிபுரியும் ஒரு காவல்துறை அதிகாரி, நிகில் சூட் தற்கொலைச் செய்யப் போவதாக ஒரு பெண்ணிடமிருந்துத் தொலைப்பேசி அழைப்பைப் பெருகிறார். இது தனதுக் குடும்பத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நிகில் அறியவில்லை.

யுத்த சதம்

#TamilSchoolmychoice

யுத்த சதம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்: கௌதம் கார்த்திக்

ஓர் இளம் பெண் காவல் நிலையத்திற்கு முன்பாகக் கொலைச் செய்யப்படுகிறார். தான் குற்றமற்றவர் என்றுக் கூறும் தனியார் துப்பறியும் பணிப்புரியும் இறந்தப் பெண்ணின் காதலர் மீது இன்ஸ்பெக்டர் சந்தேகிக்கிறார்.

ராப் போர்க்களம் சீசன் 2

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நீதிபதிகள்: யோகி பி & நவின் நேவிகேட்டர்
அறிவிப்பாளர்: எம்சி ஜெஸ்
வழிகாட்டுநர்கள்: செயின்ட் டிஎஃப்சி & ஷீசே

#ராப்இசைத்தொடரும் என்றக் கருப்பொருளுடன் மலரும் இந்நிகழ்ச்சி, ஆர்வமுள்ள உள்ளூர் ராப்பர்கள் இத்தளத்தின் மூலம் அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் தங்களின் கனவுகளை அடையவும் வாய்ப்புகளை வழங்குகிறது. வெளியேற்றப்பட்டப் போட்டியாளர்கள் வைல்டு கார்டு சுற்றில் போட்டியிடுவார்கள்.

திங்கள், 1 ஆகஸ்ட்

உப்புரொட்டி சிதம்பரம் (புதிய அத்தியாயங்கள்- 17-20)
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 9.30 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: நதியா ஜெயபாலன், கபில் கணேசன், தாஷா கிருஷ்ணகுமார், கே. குணசேகரன், கோமள நாயுடு & கவிதா
சிதம்பரம் பிரகாஷைப் பற்றி அறிய அவரதுச் சகோதரர், கணபதியின் உதவியைப் பெறுகிறார்.

வணக்கம் டாக்டர் (புதிய அத்தியாயம் – 14)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 9 மணி, திங்கள் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்: டாக்டர் புனிதன் ஷான்

இவ்வார அத்தியாயத்தில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் திருமுருகன், மூட்டு வீக்கத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்வார்.

செவ்வாய், 2 ஆகஸ்ட்

மீனாட்சி பொண்ணுங்க (Meenakshi Ponnunga) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223), இரவு 8.30 மணி, திங்கள் – சனி

நடிகர்கள்: அர்ச்சனா, காயத்ரி யுவராஜ், பிரணிகா தக்ஷு & மோக்ஷிதா

தங்களது கனவுகளை நிறைவேற்ற மீனாட்சி மற்றும் அவரது மகள்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கதைச் சித்தறிக்கிறது. தனதுக் குழந்தைகளைப் பாதுக்காக்கவும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரவும் எவ்வாறு மீனாட்சி எல்லா முரண்பாடுகளையும் எதிர்கொள்கிறார் என்பதேக் கதையின் மையக்கரு.

வெள்ளி, 5 ஆகஸ்ட்

விசித்திரன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆர்.கே. சுரேஷ் & பூர்ணா

மனைவியை இழந்தப் பிறகுத் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை (விஆர்எஸ்) பெற்ற ஒரு காவல்துறை அதிகாரி, அவரது மரணத்திற்குப் பின்னால் உள்ள ஒரு பெரிய மருத்துவக் குற்றத்தைக் கண்டுப்பிடிக்கிறார்.

ராப் போர்க்களம் சீசன் 2 (புதிய அத்தியாயம் – 10)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நீதிபதிகள்: யோகி பி & நவின் நேவிகேட்டர்
அறிவிப்பாளர்: எம்சி ஜெஸ்
வழிகாட்டுநர்கள்: செயின்ட் டிஎஃப்சி & ஷீசே

#ராப்இசைத்தொடரும் என்றக் கருப்பொருளுடன் மலரும் இந்நிகழ்ச்சி, ஆர்வமுள்ள உள்ளூர் ராப்பர்கள் இத்தளத்தின் மூலம் அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் தங்களின் கனவுகளை அடையவும் வாய்ப்புகளை வழங்குகிறது. முதல் அரையிறுதிச் சுற்றில் போட்டியாளர்கள் போட்டியிடுவர்.

சனி, 6 ஆகஸ்ட்

ஸ்டார் சேப் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 7.30 மணி, சனி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நட்சத்திரா தொகுத்து வழங்கும் சுவையானச் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளைச் சித்தறிக்கும் ஒரு சமையல் நிகழ்ச்சி.

டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 4 (சீசன் முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223), இரவு 7.30 மணி, சனி-ஞாயிறு

தொகுப்பாளர்கள்: கிகி & ஆர்ஜே விஜய்
நீதிபதிகள்: சினேகா & பாபா பாஸ்கர்

புதியத் திறமையாளர்களைப் பிரபலப் போட்டியாளர்களுடன் இணைத்து நட்சத்திர நிலையை அடைய உதவும் ஒரு நடனம் சார்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சி. ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களிடையே நிழவும் கடுமையானப் போட்டியையும் இந்த நிகழ்ச்சிச் சித்தறிக்கும்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட்

உமா’ஸ் கிச்சன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 7.30 மணி, ஞாயிறு |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

பல சமையல் குறிப்புகளை வழங்கும், நடிகை உமா ரியாஸ் பங்கேற்க்கும் ஒரு சமையல் நிகழ்ச்சி.

*நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை