Home நாடு சிலாங்கூரின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் காலமானார்

சிலாங்கூரின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் காலமானார்

574
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) காலமானார். அவருக்கு வயது 76.

அரசாங்க முதலீட்டு அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளை வகித்த அவர் பின்னர் பிகேஆர் கட்சியில் இணைந்து அரசியல் களத்தில் இறங்கினார். 2008-ஆம் ஆண்டில் பிகேஆர் தலைமையில் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றியபோது மாநில மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் உட்கட்சிப் போராட்டங்களால் பிகேஆர் கட்சியிலிருந்து விலகினார்.