Home உலகம் தைவானுக்கு எதிராக சீனா இராணுவ நடவடிக்கையா?

தைவானுக்கு எதிராக சீனா இராணுவ நடவடிக்கையா?

655
0
SHARE
Ad
நான்சி பெலோசி – அமெரிக்க பிரதிநித்துவ அவையின் தலைவர்

வாஷிங்டன் : தைவானுக்கு எதிரான சீன இராணுவ நடவடிக்கைக்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்கா இதுவரை அடையாளம் காணவில்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

அமெரிக்காவில் அதிபர், துணையதிபருக்கு அடுத்து 3-வது நிலை அரசாங்கத் தலைவராக மதிப்பிடப்படும் வெள்ளிக்கிழமை அமெரிக்க பிரதிநிதிகள் அவையின்  சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் தீவுக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருகைக்கு எதிராக சீனா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தைவானுக்கான பயணத்தை பெலோசி உறுதிப்படுத்தவில்லை.

இதற்கிடையில் கடந்த வியாழன் அன்று (ஜூலை 28) அதிபர் ஜோ பைடனுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையே நடந்த தொலைபேசி அழைப்பில் தைவான் மீது நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று ஜி எச்சரித்தார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனா தைவானைச் சுற்றி இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு சீன இறையாண்மையை ஏற்படுத்த நீண்ட காலமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.

தைவான் அரசாங்கம், தீவின் 23 மில்லியன் மக்கள் மட்டுமே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்று கூறுகிறது, மேலும் அது அமைதியை விரும்பும் அதே வேளையில், தாக்கப்பட்டால் அது தற்காத்துக் கொள்ளும் வலிமையைப் பெற்றுள்ளதாகவும் அறிவித்திருக்கிறது.

பெலோசி, தான் ஆசியாவிற்குப் பயணம் செல்வதாகக் கூறினார். ஆனால் தைவான் செல்வதாக இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

உக்ரேன் மீது ரஷியா போர் தொடுத்ததைப் போன்று சீனாவும் திடீரென தைவான் மீது படையெடுக்கக் கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.