Home Photo News அப்துல் கலாம் இல்லத்திற்கும், நினைவிடத்திற்கும் சரவணன் வருகை

அப்துல் கலாம் இல்லத்திற்கும், நினைவிடத்திற்கும் சரவணன் வருகை

611
0
SHARE
Ad

இராமநாதபுரம் : தமிழ் நாட்டிலுள்ள இராமநாதபுரம் வட்டாரத்திலுள்ள மலேசியத் தொழிலதிபர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன், இந்தியாவின் முன்னாள் அதிபர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பூர்வீக இல்லத்திற்கும், அன்னாரின் நினைவிடத்திற்கும் வருகை தந்தார்.

“உலகின் மிகச்சிறந்த பிதாமகன் துயில் கொள்ளும் இடத்தில் நின்று வியந்து பார்க்கிறேன். டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில் நிற்கும்போது மெய்சிலிர்த்தது. இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாக்கக்கூடிய அவரின் பொன்மொழிகள் ஒவ்வொன்றும், அங்கு வரையப்பட்டிருந்தன” என சரவணன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற அப்துல் கலாமின் பொன்மொழியையும் சரவணன் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

“உலக மக்களால் போற்றப்பட்ட 11 ஆவது இந்திய குடியரசுத் தலைவரும் ஒட்டு மொத்த இந்தியர்களின் பெருமைக்குரியவருமான டாக்டர் அப்துல் கலாம்
அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவரது சொந்தங்களைச் சந்தித்ததில் அளவில்லா ஆனந்தம். அப்துல் கலாம் எனும் குழந்தை முகம் கொண்ட ஆளுமையின் உணர்வுகளும், கனவுகளும் அங்கே கண் முன் நிழலாடின” என்றார் சரவணன்.

‘தூக்கத்தில் வருவதல்ல கனவு, தூங்கவிடாமல் செய்வதே கனவு’ என்பது அப்துல் கலாமின் புகழ்பெற்ற வாசகங்களில் ஒன்றாகும்.

சரவணன் வருகை தொடர்பான படக் காட்சிகளை இங்கே காணலாம்: