Home நாடு எஸ்ஆர்சி வழக்கு: நஜிப்பின் புதிய ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதா? கூட்டரசு நீதிமன்றம் விசாரிக்கும்

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப்பின் புதிய ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதா? கூட்டரசு நீதிமன்றம் விசாரிக்கும்

492
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நஜிப் ரசாக் மீதான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவரின் விண்ணப்பம் மீதான வழக்கை திங்கட்கிழமை ஜூன் 27-ஆம் தேதியன்று கூட்டரசு நீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் தன்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி, அந்த வழக்கு விவகாரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தப்பட்டிருப்பதால் நலன் முரண்பாட்டின் காரணமாக அந்த வழக்கிலிருந்து விலகிக் கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நஜிப் ரசாக் தனது மேல்முறையீட்டைச் சமர்ப்பித்திருக்கிறார்.

திங்கட்கிழமையன்று இந்த வழக்கு வீடியோ கான்பரன்சிங் எனப்படும் இயங்கலை மூலம் கூட்டரசு நீதிமன்ற துணைப் பதிவாளர் முன்னிலையில் நடைபெறும்.

#TamilSchoolmychoice

நஜிப்பின் கூற்றுப்படி, விண்ணப்பத்தின் மையமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் இந்த ஆண்டு மே மாதத்தில்தான் தங்களின் பார்வைக்குக் கிடைக்கப் பெற்றன என அவர் தெரிவித்திருக்கிறார்.