மலேசியா கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவரும்,
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் தலைமையில் கண்ணதாசன் விழா நடைபெறுகிறது.
தமிழகப் பேச்சாளர் தாமல் கோ.சரவணன், இசைவாணி இந்திரா விஜயலட்சுமி, கவிஞர் பெர்னாட்ஷா அவர்களின் உரைகளோடு, கவிஞர் கோவதன் அவர்களின் கவிதையும் கண்ணதாசன் விழாவில் இடம்பெறும்.
காலத்தை வென்ற கவியரசு கண்ணதாசன்
அவர்கள் விட்டுச்சென்ற இலக்கியங்களைக் கேட்பதும், பார்ப்பதும், இரசிப்பதும் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழ் அமுதம் பருக தமிழன்பர்களும் இலக்கியப் பிரியர்களும் திரண்டு வருக என ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.