Home One Line P1 பொதுமக்களை தூண்டியதன் தொடர்பில் லோக்மான் குற்றம் சாட்டப்பட்டார்!

பொதுமக்களை தூண்டியதன் தொடர்பில் லோக்மான் குற்றம் சாட்டப்பட்டார்!

712
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ உச்சமட்டக் குழு உறுப்பினரான டத்தோ லோக்மான் நூர் அடாம் இன்று செவ்வாய்க்கிழமை, பொதுமக்களை தூண்டிய குற்றச்சாட்டில் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

46 வயதான லோக்மான் நூர், மாஜிஸ்திரேட் எர்ரி ஷாஹ்ரிமான் முன் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார்.

கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி மதியம் 12.01 மணி முதல் இரவு 11.59 மணி வரைலோக்மான் அடாம்எனும் யூடியூப் சமூக தளம் மூலம் பொதுமக்களை தூண்டும் செயலை மேற்கொண்டதாக லோக்மான் நூர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

லோக்மான் அடாம் மீது தண்டனைச் சட்டம் பிரிவு 505-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.