Home இந்தியா கலாம் இல்லத்திலிருந்து அரசியல் பயணத்தைத் துவங்கினார் கமல்!

கலாம் இல்லத்திலிருந்து அரசியல் பயணத்தைத் துவங்கினார் கமல்!

1047
0
SHARE
Ad

இராமேசுவரம் – உலகநாயகன் கமல்ஹாசன் இன்று புதன்கிழமை காலை, இராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் துவங்கினார்.

இன்று காலை அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முத்துமீரான் மரக்காயரைச் சந்தித்து, அவருக்கு கைக்கடிகாரம் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.

பின்னர், அவரது குடும்பத்தினருடன் சிற்றுண்டி அருந்திவிட்டு, அங்கிருந்து அப்துல் கலாம் படித்த பள்ளியைப் பார்வையிடப் புறப்பட்டார்.

#TamilSchoolmychoice

எனினும், அப்பள்ளியைப் பார்வையிட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், வெளியில் இருந்தபடி அதனைப் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.