Home One Line P2 சீனா – மொரிஷியஸ் இடையில் கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தம்

சீனா – மொரிஷியஸ் இடையில் கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தம்

852
0
SHARE
Ad

பெய்ஜிங் – சீனாவுக்கும் மொரிஷியஸ் நாட்டுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை கையெழுத்தாகியுள்ள கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தம் (free trade agreement) இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

காரணம், உலகில் இந்தியத் துணைக்கண்டத்திற்கு வெளியே பெரும்பான்மை இந்து மக்களைக் கொண்ட ஒரே நாடு மொரிஷியஸ் ஆகும். இந்தியாவுடன் நல்லுறவு பாராட்டி வரும் மொரிஷியஸ் சீனாவுடன் சுதந்திரமாக வணிகத்தில் ஈடுபட இந்தப் புதிய வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

உலக நாடுகளோடு தனித் தனியாக கட்டுப்பாடற்ற வணிக உடன்பாடுகளைக் கண்டு வரும் சீனாவுக்கு இது 17-வது வணிக ஒப்பந்தமாகும்.

#TamilSchoolmychoice

ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சார்ந்த ஒரு நாட்டுடன் சீனா கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இதுவே முதன் முறையாகும்.

பொருட்கள் மீதான ஏற்றுமதி, இறக்குமதி, சேவைகள், முதலீடுகள், பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய அம்சங்களை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.

இதன் மூலம் ஆப்பிரிக்கச் சந்தையிலும், மொரிஷியஸ் வழியாக சீனாவின் வணிக நிறுவனங்கள் தங்களின் வணிகங்களை விரிவாக்கிக் கொள்ள முடியும்.

கடந்த டிசம்பர் 2017-இல் தொடங்கிய சீனா – மொரிஷியஸ் இடையிலான கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தம் மீதிலான பேச்சு வார்த்தைகள் நான்கு சுற்றுகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து நேற்று அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.