Home உலகம் டிரம்ப் பின்வாங்குகிறார்! வரி விதிப்பில் கணினிகள், திறன் பேசிகளுக்கு விதிவிலக்கு!

டிரம்ப் பின்வாங்குகிறார்! வரி விதிப்பில் கணினிகள், திறன் பேசிகளுக்கு விதிவிலக்கு!

93
0
SHARE
Ad

வாஷிங்டன் :எகத்தாளமாக, கம்பீரத்துடன் பல உலக நாடுகளுக்கு மயக்கம் தரும் அளவுக்கு அதிகமான தீர்வைகள், வரிகள் விதித்து உத்தரவு போட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது உறுதியான முடிவுகளில் இருந்து கட்டம் கட்டமாகப் பின்வாங்கி வருகிறார்.

அமெரிக்காவின் நெருக்கமான நாடாகப் பார்க்கப்படும் இஸ்ரேல் தற்போது போரில் ஈடுபட்டிருப்பதால் கூடுதல் வரிவிதிப்பிலிருந்து அந்த நாட்டுக்கு விதிவிலக்கு அளித்தார்.

அடுத்த கட்டமாக சீனா தவிர்த்த மற்ற உலக நாடுகளுக்கான வரிவிதிப்பை 90 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

தற்போது மின்னியல் சாதனங்களுக்கு குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் கணினிகள், திறன்பேசிகள் ஆகியவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கப்படாது என அறிவித்திருக்கிறார்.

இதன் மூலம் முறையாகத் திட்டமிடாமல், தூர நோக்கு இலக்குகளைக் கொண்டிராமல் தனது அதிரடி வரிவிதிப்புக் கொள்கையை டிரம்ப் அறிவித்திருக்கிறார் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.

டிரம்பின் அறிவிப்புகளைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. அமெரிக்க டாலரும் சரிவைச் சந்தித்தது.

இதற்கிடையில் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 145 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை பதிலடியாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா-சீனா வணிகப் போரினால் ஐபோன்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன்களையும், அதன் பெரும்பான்மை உபரிப் பாகங்களையும் ஆப்பிள் சீனாவில் தயாரிக்கிறது. ஆப்பிள் சாதனங்கள், உபரிப் பொருட்களில் 90% சீனாவில் தயாரிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.