Home நாடு ஆயர் கூனிங்: தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேஷனல் – பிஎஸ்எம் – மும்முனைப் போட்டி!

ஆயர் கூனிங்: தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேஷனல் – பிஎஸ்எம் – மும்முனைப் போட்டி!

112
0
SHARE
Ad
தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முகமட் யூஸ்ரி பாக்கிர் – கே.எஸ்.பவானி -பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் பாஸ் கட்சியின் அப்துல் முஹாய்மின் மாலிக்

தாப்பா: இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 12) காலையில் நடைபெற்ற ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து, அங்கு மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.

இந்த இடைத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளது.

தேசிய முன்னணி வேட்பாளருடன் டத்தோஸ்ரீ எம்.சரவணன், மற்ற தேசிய முன்னணி தலைவர்கள்…

தாப்பாவின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் ஆயர் கூனிங் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில்,  டாக்டர் முகமட் யூஸ்ரி பாக்கிர் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

பெரிக்காத்தான் நேஷனல் அறிவித்திருக்கும் வேட்பாளர் பாஸ் கட்சியின் அப்துல் முஹாய்மின் மாலிக் (வயது 43) ஆவார். அவர் தாப்பா பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவருமாவார்.

இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 12) ஆயர் கூனிங் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. வாக்களிப்பு ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும். முன்கூட்டிய வாக்களிப்பு ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெறும்.

பிஎஸ்எம் கட்சி வேட்பாளர் பவானியுடன் உரிமை கட்சித் தலைவர் இராமசாமி

இந்த இரு கூட்டணிகளின் வேட்பாளர்களோடு போட்டியில் குதித்திருக்கிறது பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா கட்சி. அந்தக் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.பவானி போட்டியிடுகிறார்.

இந்த மும்முனைப் போட்டியினால் இந்தத் தொகுதியிலுள்ள சுமார் 14 விழுக்காடு இந்தியர் வாக்குகள் எந்தப் பக்கம் போகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இருபுறமும் இஸ்லாமிய மத அறிஞர்கள் போட்டியிடுவதால், இந்தியர்கள் இந்திய வேட்பாளரான பவானிக்கு வாக்களிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

பிஎஸ்எம் கட்சி எப்படிப் பார்த்தாலும் வெற்றி பெற முடியாது என்பதுதான் உண்மை நிலவரம். ஆனால், அவர்கள் இந்திய வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் எத்தனை வாக்குகள் பெறுவார்கள் – அந்த இந்திய வாக்குப் பிளவால் – எந்தக் கூட்டணிக்குப் பாதிப்பு என்பதைக் காண அரசியல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி, பிஎஸ்எம் கட்சிக்குத் தாங்கள் ஆதரவு வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.