கோலாலம்பூர் – வாடிக்கையாளர்கள் அஸ்ட்ரோவின் ஆன் டிமாண்ட் சேவையை நாடி, தங்கள் விரும்புகின்ற அல்லது பார்க்கத் தவறவிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியை விரும்புகின்ற நேரத்தில் உடனுக்குடன் தேர்ந்தெடுத்துத் தற்போது கண்டு மகிழலாம்.
அவ்வகையில் அஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளியேறும் பலத் தரப்பட்ட நிகழ்ச்சிகளை தற்போது ஆன் டிமாண்ட் சேவையின் வழி கண்டு களிக்கலாம்.
தி வால் (The Wall)
விஜய் டிவி அறிவிப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்கும் இந்த கேம் ஷோ டிஜிட்டல் போர்டில் விளையாடும் அறிவு மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும். இரண்டு நபர்கள் ஜோடியாக விளையாடும் இந்நிகழ்ச்சியில் அதிர்ஷ்டமும் அறிவும் கைகொடுத்தால் போட்டியாளர்கள் இரண்டரை கோடி ரூபாயை வெல்லலாம்.
ஸ்டார்ட் மியூசிக்
“ஸ்டார்ட் மியூசிக்” – இசையை மையமாகக் கொண்டு கேளிக்கையையும் கலந்து விஜய் டிவி அறிவிப்பாளர் பிரியங்கா தொகுத்து வழங்கும் கேம் ஷோ நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில் வாரந்தோறும் இரண்டு நட்சத்திரக் குழுக்கள் களமிறங்குவார்கள். ஒவ்வொரு சுற்றிற்கும் பரிசுத்தொகை அதிகரித்துக் கொண்டே போகும். நான்கு சுற்றின் முடிவில் எந்த அணி அதிக பரிசுத்தொகையுடன் உள்ளார்களோ அவர்களே அந்த வாரத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.
கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2
‘கலக்கப் போவது யாரு’ மற்றும் ‘அது இது எது’ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர்கள் இப்போட்டியில் களமிறங்கி தங்களுடைய அசத்தலான படைப்புகள் வழங்குவார்கள். குழுக்களாகப் பங்கெடுக்கும் இவர்கள் நடுவர்களைக் கவர்ந்து யார் இந்த சீசனின் “கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்” பட்டத்தைத் தட்டிச் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The Adventures of Motu Patlu
‘The Adventures of Motu Patlu’ ஒரு அனிமேஷன் தொடராகும். ஃபர்ஃபுரி நகரைச் சேர்ந்த மோட்டு மற்றும் பட்லு இரு கதாபாத்திரங்களின் கதையாகும். மொத்தத்தில் ‘மோட்டு பட்லு’ குதூகலமான நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை அஸ்ட்ரோ கோ மற்றும் அஸ்ட்ரோ வானவில் ஆகிய அலைவரிசைகளில் கண்டு களிக்கலாம்.
உங்கள் திரை படங்கள்
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘மான்ஸ்டர்’, ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘2.0’, இயக்குனர் ஆனந்த் சங்கர் எழுதி இயக்கிய ‘இருமுகன்’, விஜய் நடிப்பில் ஜில்லா, கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்களைக் கண்டு மகிழலாம்.
மேல் விவரங்களுக்கு www.watchod.com என்ற இணையதளத்தை வலம் வரலாம்.