Home One Line P2 ஆஸ்ட்ரோ இந்திய உள்ளூர் தொலைக்காட்சித் திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ளது

ஆஸ்ட்ரோ இந்திய உள்ளூர் தொலைக்காட்சித் திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ளது

698
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்த ஆண்டில் மலரும் இந்தியப் புத்தாண்டுகளைச் சிறப்பாகக் கொண்டாட, அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, புத்தம் புதிய தொலைக்காட்சி திரைப்படங்களை (டெலிமூவிக்களை) ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக கண்டு மகிழலாம். நான்கு மொழிகளிலான இந்தத் தொலைக்காட்சித் திரைப்படங்கள் மார்ச் 25 மற்றும் ஏப்ரல் 13 முதல் 15 வரை திரையிடப்படும்.

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசைக்கான வணிகத் துணைத் தலைவர் மார்க் லூர்தஸ் கூறுகையில், “இந்த ஆண்டுக்கான புத்தாண்டுகளை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம் மற்றும் தமிழில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு டெலிமூவிக்களைப் பிரத்தியேகமாக ஒளிப்பரப்புவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமூகத்திற்கான மொழி, கலை மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சியை உள்ளடக்கிய மலேசிய இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையை ஆதரிப்பதோடு உள்ளூர் உள்ளடக்கங்கள் மற்றும் திறமைகளை வென்றெடுப்பதிலும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ வானவில்லுடன் கீழ்வரும் தேதிகளில் இணையலாம்:

  • 25 மார்ச்: சோமா காந்தன் இயக்கத்தில் பிரகாஷ் ராவ், வானிஷ்ரி ராவ், ரவீன் ராவ் மற்றும் செனிபையன் பிளேக் யாப் நடித்த தெலுங்கு டெலிமோவியான ‘ரங்குலு’, ‘உகாடி’ (தெலுங்கு புத்தாண்டு) அன்று திரையிடப்படும்.
  • 13 ஏப்ரல்: அர்ஜின் உப்பால் இயக்கிய ‘ரப்பா மேரேயா’, பஞ்சாபி டெலிமூவியில் அவிந்தர் சிங், ஹேமந்த் ஷெர்கில், நவீந்தர் கோர், குர்விந்தர் சிங் மற்றும் மல்கித் கோர் நடித்து சிறப்பிக்க இட்டெலிமூவி ‘வைசாக்கி’ (பஞ்சாபி புத்தாண்டு) அன்று ஒளிபரப்பப்படும்.
#TamilSchoolmychoice

  • 14 ஏப்ரல்: ‘வெண்பா’ புகழ் கவி நந்தன் கைவண்ணத்தில் மலர்ந்த ‘கண்மணி அன்போடு காதலன்’ டெலிமூவியில் குபேன் மகாதேவன் மற்றும் பாஷினி சிவகுமார் முதன்மை கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தத் தொலைக்காட்சித் திரைப்படம் ‘சித்திரை புத்தாண்டு’ (தமிழ் புத்தாண்டு) அன்று திரையிடப்படும்.

  • 15 ஏப்ரல்: ‘புலனாய்வு புகழ் ஷாலினி பாலசுந்தரம் கைவண்ணத்தில் மலர்ந்த ‘அச்சம்மக்கு ஒரு விசுகனி’, மலையாள டெலிமூவி ‘விஷு’ (மலையாள புத்தாண்டு) கொண்டாட்டத்தின் மறுநாள் ஒளிபரப்பப்படும். இட்டெலிமூவியில் டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர், ஆனந்தா, மற்றும் கீர்த்திகா நாயர் நடித்து சிறப்பித்துள்ளனர்.

மேல் விவரங்களுக்கு ஆஸ்ட்ரோவின் சமூக வலைத்தளங்களை வலம் வாருங்கள்: Facebook | Instagram