Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

1097
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஆஸ்ட்ரோ தனது பல்வேறு அலைவரிசைகளில் அணிவகுத்து வைத்திருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை வெளியிட்டுள்ளது.

வெள்ளி, 1 மே

ரெட்ரோ ரஹ்மான் 2.0 (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), மாலை 6.00 மணி, பகுதி 1  | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

மனோ, ஸ்ரீனிவாஸ், ஹரினி, சாதனா சர்கம், மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் சத்யா பிரகாஷ் உள்ளிட்ட இந்தியாவின் பிரபல பாடகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் 90-ஆம் ஆண்டில் வெளிவந்த பாடல்களைப் பாடி அசத்தும் இசை நிகழ்ச்சியைக் கண்டு மகிழுங்கள். இசை நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

  • ஸ்ரீனிவாஸ், ஹரிணி படையப்பா படத்தின் பாடல் போரை மீண்டும் உருவாக்குகின்றனர்
  • இசை நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பாடகர் கார்த்திக்
  • அனில் ஸ்ரீனிவாசன் வேடிக்கையான நகைச்சுவைகளைக் கூறி அசத்துகிறார்
  • சத்தியபிரகாஷ் தனது குரல் மாற்றத்தால் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறார்
  • பிரபலமான பாடல் ‘முக்காலா முக்காப்புலா’ உடன் பாடகர் மனோ
  • தங்களை விட மக்கள் சிறப்பாக பாடினர் என பாடகர்கள் உணர்ந்த தருணங்கள்

கீதா கோவிந்தம் திரைப்படம் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஸ்டார் விஜய் (எச்டி அலைவரிசை 232 / அலைவரிசை 224), பிற்பகல் 1.00 மணி

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா & வென்னேலா கிஷோர்

ஒரு இளம் கல்லூரி விரிவுரையாளரான, விஜய் கோவிந்த், இளம் வயதில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். உயர்நிலையில் உள்ள சுயாதீனமான பெண்ணான கீதாவின் பால் காதல் வயப்பட அவரை திருமணம் செய்ய முயற்சிக்கிறார்.

சாஹோ திரைப்படம் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: பிரபாஸ் & சிரத்தா கபூர்

ஓர் இரகசிய காவல்துறை அதிகாரி தனது கூட்டாளருடன் சேர்ந்து ஒரு புதையலின் இறுதி திறவுகோலான ‘கறுப்புப் பெட்டியை’ பெற முயற்சிக்கும் குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி செய்கிறார். அவ்வேளையில் இவ்வழக்கு ஒரு குற்றத் தலைவரின் கொலையுடன் தொடர்புடையதை உணர்கின்றனர்.

திரௌபதி திரைப்படம் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ரிச்சர்ட் ரிஷி & ஷீலா ராஜ்குமார்

கிராம சமூக ஆர்வலரான, திரெளபதியும், அவரது கணவரும் போலி திருமணங்கள் உள்ளிட்ட பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வக்கீல்களின் குழுவினரை ஆராய்வதோடு அவர்களை எதிர்த்துப் போராடுகின்றனர்.

ஆக்‌ஷன் திரைப்படம் தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஸ்டார் விஜய் (எச்டி) அலைவரிசை 232 / அலைவரிசை 224), மாலை 7.00 மணி

நடிகர்கள்: விஷால், தமன்னா பாத்தியா & ஐஸ்வர்யா லெட்சுமி

ஓர் இந்திய இராணுவ அதிகாரி சுபாஷ் ஒரு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளியையும் சூத்திரதாரியையும் கைது செய்ய வேண்டியப் பொறுப்பை ஏற்கிறார். இருப்பினும், பயங்கரவாதிகள் இந்தியாவில் அரசியல் குழப்பத்தை ஏற்ப்படுத்த திட்டமிடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்த பின் சுபாஷின் பணி மிகவும் சவாலானதாகவும் சிக்கலானதாகவும் மாறுகிறது.

வீரபலி திரைப்படம் – தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஸ்டார் விஜய் (எச்டி) அலைவரிசை 232 / அலைவரிசை 224), காலை 10.00 மணி

நடிகர்கள்: பிரபாஸ், தமன்னா, தீக்சா சேத் & கிருஷ்ணம் ராஜு

ரிஷி தனது பெற்றோரின் கொடூரமான கொலையின் பின்னணியில் உள்ள கொலையாளிகளைக் கண்டறிய முற்பட இறுதியில் அவனது மாமா அக்கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதைக் கண்டறிகிறான்.

திருடாதே பாப்பா திருடாதே – உள்நாட்டுத் திரைப்படம்

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), பிற்பகல் 3.30 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சுரேஷ், ஷாலினி பாலசுந்தரம், கபில் கணேசன் & யுவராஜ்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காதல் நகைச்சுவைத் திரைப்படமான இத்திரைப்படத்தில் இரு துருவங்களான வெவ்வேறு கதாபாத்திரங்கள் தங்களுக்கு பிடித்தமான ஆர்வமுள்ள ஒரே விஷயத்தை நோக்கி வாழ்க்கையை வழிநடத்த, ஒருவருக்கொருவர் வளர்ந்த விதம் காரணமாக அனுகுமுறை வேறுபடுகின்றது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் – தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஸ்டார் விஜய் (எச்டி அலைவரிசை 232 / அலைவரிசை 224), பிற்பகல் 4.00 மணி

நடிகர்கள்: துல்கர் சல்மான் & ரித்து வர்மா

ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகளிலிருந்து பணம் சம்பாதிக்கும்  சித்தார்த் மற்றும் காலிஸ், இரு இளைஞர்களைப் பற்றி சித்தரிக்கும் காதல் திரில்லர் திரைப்படமானது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. அவர்களின் கனவுப் பெண்களான மீரா மற்றும் ஸ்ரேயாவைச் சந்தித்தபின் அவர்களின் வாழ்க்கை ஒரு சுவாரசியமான திருப்பத்தை ஏற்ப்படுத்துகிறது.

“என்னை அறிந்தால்” திரைப்படம் – நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), பிற்பகல் 1.30 மணி | ஆஸ்ட்ரோ கோவில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அஜித், திரிஷா, அனுஷ்கா & அருண் விஜய்

ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி, சத்தியதேவ் தனது அன்புக்குரியவர்களைக் கொன்றவர், உறுப்புக் கடத்தலை நடத்துபவர் என்பது கூட அறியாமல் அக்கடத்தலை நிறுத்தக் கடுமையாக முயற்சிக்கிறார்.

கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்

கலர்ஸ் எச்.டி (Colors HD Tamil) (அலைவரிசை 233), திங்கள்-சனி, இரவு 8.00 மணி

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பல திறன்மிக்க குழந்தைகளை அறிமுகப்படுத்த, அவர்கள் மேடையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்கின்றனர்.

“ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”

ஸ்டார் விஜய் (எச்டி அலைவரிசை 232 / அலைவரிசை 224), திங்கள்-வெள்ளி, இரவு 9.30 மணி

காணொளி (வீடியோ) செய்தியாளர் சந்திப்பு மற்றும் சுய காணொளிகள் மூலம் பிரபலங்களுடன் தொகுப்பாளர்களை இணைக்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. ஊரடங்கின் போது பிரபலங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களைத் தொகுப்பாளர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள்.

சனி, 2 மே

ரெட்ரோ ரஹ்மான் 2.0 (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) – தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), மாலை 6.00 மணி, பகுதி 2  | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

மனோ, ஸ்ரீனிவாஸ், ஹரிணி, சாதனா சர்கம், மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் சத்யா பிரகாஷ் உள்ளிட்ட இந்தியாவின் பிரபல பாடகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் 90-ஆம் ஆண்டில் வெளிவந்த பாடல்களைப் பாடி அசத்தும் இசை நிகழ்ச்சியைக் கண்டு மகிழுங்கள். இசை நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

  • ஸ்ரீனிவாஸ் மற்றும் ஹரிணி படையப்பாவின் பாடல் போரை மீண்டும் உருவாக்குகின்றனர்
  • இசை நிகழ்வின் சிறப்பம்சமாக கார்த்திக்
  • அனில் ஸ்ரீனிவாசன் வேடிக்கையான நகைச்சுவைகளைக் கூறி அசத்துகிறார்
  • சத்தியபிரகாஷ் தனது குரல் மாற்றத்தால் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறார்
  • பிரபலமான பாடல் ‘முக்காலா முக்காப்புலா’ உடன் பாடகர் மனோ
  • தங்களை விட மக்கள் சிறப்பாக பாடினர் என பாடகர்கள் உணர்ந்த தருணங்கள்

வியாழன், 7 மே

புத்தரின் சரணாலயங்கள் – விசாக தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), மாலை 6.30 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

கோலாலம்பூரில் அமைந்துள்ள சிறப்புமிக்க புத்த கோவில்களின் வரலாறு, கட்டிடக்கலை மற்றும் தனித்துவம் போன்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ஆவணப்படம்.

முனி (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) – விசாக தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 1.30pm  | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், வேதிகா & கோவை சரளா

குழந்தை பருவத்திலிருந்தே கேட்ட ஏராளமான பேய் கதைகளால் இருள் குறித்த அச்சத்துடனும் வளர்ந்த கணேஷைப் பற்றிய நகைச்சுவைத் திகில் திரைப்படம். ஒரு புதிய வீட்டிற்குச் சென்றபின், தன்னைக் கொன்ற கொலையாளிகளைப் பழிவாங்க வேண்டும் என்று விரும்பும் ஒரு பேயால் அவர் அவதிப்படுகிறார்.

கொலையுதிர் காலம் திரைப்படம் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) – விசாக தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நயன்தாரா & பூமிகா சாவ்லா

பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் கொண்ட அனாதையான ஸ்ருதி, தனது செல்வந்த வளர்ப்புத் தாயான அபாவின் மரணத்திற்குப் பின் அவரின் சொத்துக்கு அதிபதியாகிறாள். அவள் இலண்டனில் உள்ள அபாவின் மாளிகையில் இருக்கையில், ஒரு முகமூடி அணிந்த கொலையாளியால் தாக்கப்பட அவனுக்கு எதிராக தன்னை சுயமாக தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

சிந்துபாத் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, அஞ்சலி & லிங்கா

ஒரு வஞ்சகனான திரு, வெண்பாவைக் காதலித்த பின் திருமணம் செய்கிறான். இருப்பினும், வெண்பாவின் தந்தை தகாத காரணத்திற்காக அவளை விற்கும்போது அவர்களின் திருமண வாழ்க்கை ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

தாராள பிரபு (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் (Astro First) அலைவரிசை – 480

நடிகர்கள்: தான்யா ஹோப், ஹரிஷ் கல்யாண் & பிரசாந்த்.ஆர்

ஒரு கருத்தரிப்பு மருத்துவமனை உரிமையாளர் மற்றும் மருத்துவரின் தூண்டலுக்கு இணங்க வேலையில்லா மகிழ்ச்சிமிக்க அதிர்ஷ்டசாலியான, பிரபு, வெற்றிகரமான விந்து தானம்  செய்பவராக மாறுகிறார். அவர் அதில் நல்ல பணம் சம்பாதிக்க, அதன் விளைவாக அவரது வாழ்க்கை திசை திருப்பப்படுகிறது.

வெள்ளி, 8 மே

வெல்வெட் நகரம் (முதல் ஒளிபரப்பு  – ப்ரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிறவிக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: வரலட்சுமி சரத்குமார் & ரமேஷ் திலக்

பொது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பிரச்சினைகளைப் பற்றிய ஒரு க்ரைம் த்ரில்லர்.

எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜெயம் ரவி & அசின்

கிக்-குத்துச்சண்டையில் ஆர்வமிக்க குமரன் தனது மறைந்த தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தனது பிரிந்த தந்தையை சந்திக்க மலேசியா வருகிறார்.

அம்மாவுக்கு பரிசு – அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 7.30 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்

பால கணபதி வேடிக்கையான விளையாட்டுகளை ஏற்பாடு செய்து வெற்றியாளர்களுக்கு அன்னையர் தின பரிசுகளை வழங்குகிறார்.

மோம் – அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.30pm  | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஸ்ரீ தேவி, சாஜால் அலி & அக்சய் கன்னா

தனது மகளை ஒரு விருந்தில் பாலியல் பலாத்காரம் செய்த நான்கு குற்றவாளிகளைப் பழிவாங்குகிறார், ஆத்திரமடைந்த ஒரு தாய்.