Home One Line P2 காவல் துறை முன்னாள் அதிகாரி பரமசிவம் விவரிப்பில் ஆஸ்ட்ரோவில்  ‘குற்றம் குற்றமே’ – முதல் உள்ளூர்...

காவல் துறை முன்னாள் அதிகாரி பரமசிவம் விவரிப்பில் ஆஸ்ட்ரோவில்  ‘குற்றம் குற்றமே’ – முதல் உள்ளூர் தமிழ் குற்றவியல் தொடர்

953
0
SHARE
Ad
டத்தோ ஏ.பரமசிவம்

கோலாலம்பூர் – அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் கண்டு களிக்கும் இன்னொரு வித்தியாச நிகழ்ச்சியாக நாளை ஞாயிற்றுக்கிழமை 17 மே முதல், இரவு 8 மணிக்கு பிரத்தியேகமாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் முதல் ஒளிபரப்பாக “குற்றம் குற்றமே” எனும் தொடர் படைக்கப்படுகிறது.

மலேசியாவின் முதல் உள்ளூர் தமிழ் குற்றவியல் தொடராக இந்நிகழ்ச்சி மலர்கிறது.

சந்தோஷ் கேசவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் டத்தோ ஏ. பரமசிவம் (முன்னாள் பேராக் மாநில காவல்துறைத் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் காவல்துறைத் துணை ஆணையர் (Deputy Chief Police Officer of Perak and former Deputy Superitendant of Police) விவரிப்புகளை வழங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

“குற்றம் குற்றமே” 12 அத்தியாயங்களை உள்ளடக்கியுள்ளது. கொள்ளை, கார் திருட்டு, கடத்தல், கோபத்தால் சாலையில் ஏற்படும் கடுங் குற்றங்கள் என உள்ளூர் சமூகத்தினர் சம்பந்தப்பட்ட பல  கடுமையான குற்றங்களை ஒட்டி இந்த அத்தியாயங்கள் மலர்கின்றன. ஒவ்வொரு 30 நிமிட அத்தியாயத்திலும் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் வேகமான, மனதைக் கவரும் வகையில் கதையோட்டம் அமைக்கப்பபட்டுள்ளது.

அனைத்து வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதிய அத்தியாயத்துடன் மலரும் குற்றம் குற்றமே தொடரை தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாகக் கண்டு களிப்பதோடு எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து கண்டு மகிழலாம்.