Home One Line P1 குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமில் சுற்றுலா பயணி மரணம் குறித்து சுஹாகாம் விசாரிக்கும்

குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமில் சுற்றுலா பயணி மரணம் குறித்து சுஹாகாம் விசாரிக்கும்

478
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) ஜூன் 12-ஆம் தேதி கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு குடிநுழைவுக் காவலில் இருந்தபோது இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர் இறந்தது குறித்து விசாரணையைத் தொடங்கியது.

இந்த விஷயத்தை சுஹாகாம் தலைவர் ஜெரால்ட் ஜோசப் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை பின்பற்றி விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க முடியாதபோது, விசா காலாவதியாகிவிட்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஜீவ்டீன் மஸ்தானை தடுத்து வைக்க குடிநுழைவுத் துறையின் முடிவை அவர் கேள்வி எழுப்பினார்.

“நாங்கள் வழக்கை ஆராய்ந்து விசாரிக்கத் தொடங்கிவிட்டோம். என்ன நடந்தது என்பதைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அனைவரையும் சந்திப்போம்.

#TamilSchoolmychoice

“இது மற்றொரு கவலையான பகுதியாகும். பாதிக்கப்பட்டவரின் மரணம் இயற்கை காரணங்கள், பிற கைதிகள், அமலாக்கப் பணியாளர்கள் அல்லது தூண்டுதல்களால் ஏற்பட்டதா என்பதைத் தீர்மானிக்க தடயவியல் ஆய்வாளர்களால் விசாரிக்கப்பட வேண்டும்.” என்று அவர் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு முந்தைய நாள், 67 வயதான ஜீவ்டீன் சென்னையில் இருந்து வந்து மலேசியா வந்தார். அவரது மகன் ஜமாலுதீன் மற்றும் அவரது மாமியாருடன் வந்திருந்தார். மே 8-ஆம் தேதி கோலாலம்பூர் மலையன் மென்ஷனில் நடத்தப்பட்ட சோதனையில் ஜீவ்டீன் மற்றும் அவரது மகன் குடிவுழைவுத் துறையால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர், ஜீவ்டீன் கொவிட் -19 நோயால் பாதிக்கப்படாதது உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் துறை தடுப்பு மையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவர் அத்தொற்றுக்கு நேர்மறையாகக் காணப்பட்டார் மற்றும் மே 26 முதல் ஜூன் 7 வரை தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு மீண்டும் தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஜூன் 11-ஆம் தேதி, அவர் மயக்க நிலையில் காணப்பட்டார் மற்றும் செராஸில் உள்ள துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

ஜீவ்டீன் குடும்பம் ஒரு நண்பரிடம் சடலத்தைக் கோரி மலேசியாவில் ஒரு இறுதி சடங்கை ஏற்பாடு செய்யச் சொன்னது.

நண்பர் ஒத்மான் மன்சூரின் கூற்றுப்படி, ஜீவ்டீனின் உடலை மீண்டும் கொண்டு வர குடும்பத்திடம் பணமில்லாததால் அவர்கள் அவ்வாறு செய்யக் கோரியதாகத் தெரிவித்தார்.

அவரது மகன் ஜமாலுதீன் தனது தந்தையின் மரணம் குறித்து அறிந்து கொள்வதற்கு முன்பு சென்னை திரும்பிவிட்டார்.

“இந்த நபர்கள் செல்லுபடியாகும் பயண ஆவணங்களை வைத்திருந்ததால் கைது செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், காலாவதியானது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது.” என்று ஜோசப் கூறினார்.

சாதாரண சுற்றுலா பயணத்திற்கு மாறான நடைமுறைகளுக்கு அவரது பயணங்கள் இருந்ததால், ஜீவ்டீன் கைது செய்யப்பட்டார் என்று குடிநுழைவுத் துறையின் அறிக்கைக் குறிப்பிட்டு ஜொசப் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஜோசப்பின் கூற்றுப்படி, இந்த பிரச்சனை பாதிப்புக் காலத்தை விட முன்னதாகவே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

“அவர்கள் ஆவணங்கள் இல்லாமல் வந்திருந்தால், அல்லது ஆவணம் செல்லுபடியாகாது என்றால், அது மற்றொரு கதை. ஆனால் (அவர்கள் வந்தார்கள்) செல்லுபடியாகும் ஆவணத்துடன் நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பினர், ஆனால் நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காரணமாக அவர்கள் வீட்டிற்குச் செல்லவோ அல்லது நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கவோ முடியவில்லை.

“இது உடனடியாக கைது செய்யப்பட தேவையில்லை. ஏனெனில் இது தொற்று பாதிப்பால் ஏற்பட்டது. அலட்சியம் அல்லது வேறு எந்த காரணமும் அல்ல.” என்று அவர் மேலும் கூறினார்.

ஜூன் 19 அன்று, குடிநுழைவுத் துறை இயக்குநர் கைருல் டிசைமி டாவுட், ஜீவ்டீன் 2017 மற்றும் அதற்கு பிறகு நடைமுறைக்கு மாறான பயணங்களை மேற்கொண்டதாக மேற்கொண்டதாக அவர்களின் பதிவுகள் காட்டுகின்றன என்று கூறியிருந்தார்.

கடந்த மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, பாதிப்பிலிருந்து தப்பிக்க முக்கிய பிரச்சனை, நெரிசல் மற்றும் பரவலைத் தடுப்பதாகும். ஆனால், குடிநுழைவுத் துறை அப்போது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்து சுஹாகாமும் அதிர்ச்சியடைந்ததாக ஜோசப் கூறினார்.

“தடுப்புக்காவல் நிலையம் போன்ற நெரிசலான இடத்தில் பரவுவதற்கான ஆபத்து குறித்து பேச இது ஒன்றும் ராக்கெட் அறிவியல் அல்ல. இது நிகழக்கூடும் என்பது தெளிவாகிறது, மேலும் கிருமி அங்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.” என்று அவர் மேலும் கூறினார்.