Home One Line P2 எச்1பி விசா முறையை தகுதி அடிப்படையில் வழங்க அமெரிக்கா முடிவு

எச்1பி விசா முறையை தகுதி அடிப்படையில் வழங்க அமெரிக்கா முடிவு

701
0
SHARE
Ad

வாஷிங்டன்: இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குபவை. அந்நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கும் பணியாளர்களை ‘ஆன்சைட் பிராசஸ்’ (Onsite Process)-காக அமெரிக்கா அனுப்புவது வழக்கம். அப்படி அமெரிக்கா சென்று அந்நாட்டு குடியுரிமை இன்றி அங்கு தங்கி பணிபுரிய விரும்புவோருக்கு எச்1பி, எல்–1 விசா வழங்கப்படுகிறது.

தற்போது, எச்1பி விசா முறையை சீர்திருத்த மற்றும் தகுதி அடிப்படையில் வழங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறைக்கு மாறுவதாகவும், இந்த ஆண்டு இறுதி வரை எச்1பி விசா மற்றும் பிற பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளதாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், திறமையான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதற்கும் குடியேற்ற முறையை டிரம்ப் நிர்வாகம் சீர்திருத்தும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சீர்திருத்த நடவடிக்கையால், எச்1பி விசா திட்டத்தில் அமெரிக்காவில் பணிபுரிய விரும்புவோர், அதிக சம்பளம் பெறும் ஊழியர்களுகளாகவும், அதிக திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்த புதிய சீர்திருத்தங்கள் அமெரிக்க ஊழியர்களின் ஊதியத்தைப் பாதுகாக்கவும், அதிக திறமை வாய்ந்த வெளிநாட்டவர்கள் மட்டுமே அந்நாட்டிற்குள் நுழைய முடியும் என்றும், இதன் மூலம் அமெரிக்க ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்காது என்பதையும் உறுதிப்படுத்த உதவும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுவதாகவும், அவ்வகையில், கடந்த வருடம் மட்டும் 225,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.