பிரைம் வீடியோ எனும் பிரபலமான ஓடிடி தளம் இப்போது ஆஸ்ட்ரோவின் அல்ட்ரா மற்றும் அல்டி பெட்டிகளில் கிடைக்கப்பெறுகிறது. அல்ட்ரா மற்றும் அல்டிப் பெட்டிகளைக் கொண்டிருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் ஏப்ரல் 24, 2025 முதல் ஜூன் 23, 2025 வரைக் கூடுதல் கட்டணமின்றி இரண்டு மாதங்களுக்குப் பிரைம் வீடியோ அணுகலை அனுபவிப்பார்கள்.
கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ, மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு வழங்குநரும் அமேசான், ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்குகளில் உலகளாவிய அளவில் முன்னணி வகிக்கும் நிறுவனமும் இணைந்து ஆஸ்ட்ரோவின் அல்ட்ரா – அல்டி பெட்டிகளில் அமேசான் பிரைம் வீடியோவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.
பிரைம் வீடியோவின் பிரபலமானத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோவின் பல்வேறு உள்ளடக்கச் சலுகைகளுடன் தடையின்றி ஒருங்கிணைத்து, இணையற்றப் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதாக இந்த மூலோபாயக் கூட்டாண்மை உறுதியளிக்கிறது.
உலகளாவிய உள்ளடக்கத்தின் சிறந்ததை ஒன்றிணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் பார்வை அனுபவத்தை வளப்படுத்துவதற்கான ஆஸ்ட்ரோ மற்றும் அமேசானின் கூட்டு உறுதிப்பாட்டை இந்தக் கூட்டாண்மை வலியுறுத்துகிறது. பிரைம் வீடியோ செயலியை நேரடியாக ஆஸ்ட்ரோ அல்ட்ரா மற்றும் அல்டி தளங்களில் ஒருங்கிணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் பரந்த அளவிலானப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை எளிதாக அணுக முடியும்.
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட அமேசான் ஒரிஜினல்ஸ் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் ரசிகர்களின் விருப்பமானத் தொலைக்காட்சி தொடர்கள் வரை, இவை அனைத்தும் ஒரே தளத்தில் அதாவது ஆஸ்ட்ரோவில் கிடைக்கப்பெறும்.
அல்ட்ரா மற்றும் அல்டி பெட்டிகளைக் கொண்ட அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும், ஏப்ரல் 24 முதல் ஜூன் 23, 2025 வரைக் கூடுதல் கட்டணமின்றி இரண்டு மாதப் பிரைம் வீடியோ அணுகலைச் செயல்படுத்தலாம்*. இது ரிம50 மதிப்பிலான சேமிப்பாகும்.
ஆஸ்ட்ரோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யுவன் ஸ்மித் கூறுகையில், “பிரைம் வீடியோவை அல்ட்ரா மற்றும் அல்டி பெட்டிகளில் அறிமுகப்படுத்த அமேசானுடன் இணைந்துப் பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரே இடத்தில் பரந்த அளவிலான உள்ளடக்கங்களை அணுகுவதற்கான வாய்ப்பை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பயணத்தில் இந்த ஒருங்கிணைப்பு ஒரு குறிப்பிடத்தக்கப் படியாகும். எங்களின் தற்போதைய உள்ளடக்கம் மற்றும் ஆன் டிமாண்ட் நூலகத்துடன் பிரைம் வீடியோவின் கவர்ச்சிகரமான உள்ளடக்கத்திற்குத் தடையற்ற அணுகலை வழங்குவதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அதிக மதிப்பு மற்றும் தேர்வை வழங்குகிறோம். இவை அனைத்தையும் அல்ட்ரா அல்லது அல்டி பெட்டிகள் மூலம் வசதியாக அணுகலாம். எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்ததை மட்டுமல்லாமல் வசதியானப் பொழுதுபோக்கு அனுபவத்தையும் வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்தக் கூட்டாண்மை மேம்படுத்துகிறது” என்றார்.
அமேசான் பிரைம் வீடியோவின் தென்கிழக்கு ஆசியா (SEA) & மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (MENA) இயக்குனர், டேவிட் சைமன்சன் கூறுகையில், “ஒப்பிட முடியாதப் பார்வை அனுபவத்தை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள். பிரைம் வீடியோவை ஆஸ்ட்ரோவுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்கள் பல சாதனங்களில் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை எளிதாக அணுக முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். எங்களின் இரசிகர்களுக்கு வசதியையும் தரத்தையும் வழங்குவதற்கான வாடிக்கையாளர் மீதான எங்களின் ஆர்வத்தை இது வலியுறுத்துகிறது. லார்ட் ஆஃப் தி ரிங்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் (Lord of The Ring: The Rings of Power), தி பாய்ஸ் (The Boys), மிர்சாபூர் (Mirzapur) போன்றப் பிரைம் வீடியோ ஒரிஜினல்கள் தொடங்கி மேரி மை ஹஸ்பண்ட் (Marry My Husband) மற்றும் ரீச்சர் (Reacher) போன்ற இரசிகர்களின் விருப்பமான நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் மலேசியாவின் புடாக் பிளாட் (Budak Flat) போன்றப் பிரியமான உள்ளூர் தயாரிப்புகள் வரை, பலதரப்பட்ட உள்ளடக்கங்களை இந்தக் கூட்டாண்மை மூலம் எங்கள் இரசிகர்கள் எதிர்பார்க்கலாம்” என்றார்.
ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஹாலிவுட், கொரிய, உள்ளூர் மற்றும் பிராந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் பிரத்தியேகப் பிரைம் வீடியோ ஒரிஜினல்கள் போன்றப் பிரைம் வீடியோவின் விரிவான நூலகத்தை அனுபவிக்க முடியும். அனைவரும் கண்டு மகிழ ஏதாவது ஒரு நிகழ்ச்சி இருப்பதை இது உறுதி செய்கிறது.
அமேசான் ஒரிஜினல்களான ஜி20 (G20), யு’அ கோர்டியலி இன்வைட்டட் (You’re Cordially Invited), தி ஐடியா ஆஃப் யூ (The Idea of You), ஃபால்அவுட் (Fallout) மற்றும் தி பாய்ஸ் (The Boys) ஆகியவைப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்துப் பிரைம் வீடியோவின் உள்ளடக்க வழங்கல் மலேசியாவில் பிரபலமடைந்துள்ளது.
கயாங்கான் (Kayangan), ஹவுஸ்கீப்பிங்? (HOUSEKEEPING?), தட் கவர் கேர்ள் (That Cover Girl), புடாக் பிளாட் (Budak Flat) மற்றும் டெபூஸ் (Tebus) போன்ற உள்ளூர் தயாரிப்புகளும் உள்ளூர் வாடிக்கையாளர்களிடம் வலுவாக எதிரொலிப்பதோடு, மலேசிய திறமைகளையும் கதைகளையும் எடுத்துக்காட்டுகின்றன.
கூடுதலாகத், தி டிவோர்ஸ் இன்சூரன்ஸ் (The Divorce Insurance), மேரி மை ஹஸ்பண்ட் (Marry My Husband), நியூடோபியா (Newtopia) போன்ற ஹிட்கள் உட்படப் பிரபலமானக் கொரிய உள்ளடக்கமும், மிர்சாபூர் (Mirzapur) மற்றும் இந்துக் கஜா (Induk Gajah) போன்றப் பிராந்திய இந்திய மற்றும் இந்தோனேசியத் தலைப்புகளும் உறுதியான விருப்பங்களாகும்.
அல்ட்ரா அல்லது அல்டி பெட்டிகள் வைத்திருக்கும் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள், ஆஸ்ட்ரோ ரிமோட் கண்ட்ரோலில் “முகப்பு” (Home) என்பதை அழுத்திச், “செயலிகள்” (Apps) கீழ் உள்ள பிரைம் வீடியோ செயலியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பிரைம் வீடியோவிற்கானத் தங்களின் இரண்டு மாத அணுகலைச் செயல்படுத்தலாம்.
வாடிக்கையாளர்கள் திரையில் உள்ளப் படிகளைப் பின்பற்றி அமேசான் பிரைம் கணக்கை உருவாக்கி, QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தங்கள் கணக்கை அல்ட்ரா அல்லது அல்டி பெட்டியுடன் இணைக்கலாம். பின், உலகளவில் பாராட்டப்பட்டப் பிரைம் வீடியோவின் உள்ளடக்கத்தை வாடிக்கையாளர்கள் தங்களின் விரல் நுனியில் அணுக முடியும்!
ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தங்கள் தொகுப்புகளை ஆட்-ஆன்கள் மூலம் எளிதாகத் தனிப்பயனாக்கலாம். இதில் பிரைம் வீடியோ, மேக்ஸ் (Max), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), வியு (Viu), ஐஷியி (iQIYI), வீடிவி (WeTV), ஜீ5 (Zee5), சிம்ப்ளி சவுத் (Simply South) உட்பட 13 பிரபல ஸ்ட்ரீமிங் செயலிகள் அடங்கும். தங்கள் தொகுப்புகளைப் புதுப்பித்தல், ஆட்-ஆன்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு இடையில் மாறுதல் அல்லதுப் புதியவற்றைத் தேர்ந்தெடுத்தல் உட்பட மை ஆஸ்ட்ரோ செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் தங்களதுச் சந்தாக்களில் எளிதாக மாற்றங்களைச் செய்யலாம்.
மாதத்திற்கு ரிம49.99 கட்டணத்தின் தொடக்கத்துடன் ஆஸ்ட்ரோ ஒன் தொகுப்புகளுக்கு சந்தாதாரராகுங்கள். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500 எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்குப் புலனம் செய்தி அனுப்பவும்.
*விதிமுறைகள் & நிபந்தனைகளுக்கு உட்பட்டது. பிரைம் வீடியோவின் சிறப்புச் சலுகைக் காலம் ஆஸ்ட்ரோவால் வழங்கப்படுகிறது.