Home கலை உலகம் ஆஸ்ட்ரோவில் ‘கவிதா-சவிதா’ தொடருக்குப் பரவலான வரவேற்பு – பாராட்டு!

ஆஸ்ட்ரோவில் ‘கவிதா-சவிதா’ தொடருக்குப் பரவலான வரவேற்பு – பாராட்டு!

196
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)- இல் முதல் ஒளிபரப்புக் காணும் ‘கவிதா சவிதா’ குடும்ப நகைச்சுவைத் தொடரைக் கண்டு மகிழுங்கள்

கோலாலம்பூர்: மார்ச் 17, திங்கட்கிழமை இரவு 9 மணி முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகிய தளங்களில் முதல் ஒளிபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் ‘கவிதா சவிதா’ எனும் குடும்ப நகைச்சுவைத் தொடரை அனைத்து மலேசியர்களும் கண்டு மகிழலாம்.

உள்ளூர் திரைப்பட இயக்குநர் தீபன் எம். விக்னேஷ் எழுதி இயக்கியுள்ள இந்தத் தொடர், தொழிலதிபர் திரு. கந்தாவின் மகன்களான சரவணன் மற்றும் குமரன் ஆகிய ஒரே மாதிரி இல்லாத இரட்டைச் சகோதரர்களை மணந்த பிறகு ஒரே கூரையின் கீழ் வாழ வேண்டியக் கட்டாயத்திற்கு ஆளாகும் இரண்டு கல்லூரிக்காலப் பகைமையைக் கொண்ட பெண்களைச் சித்திரிக்கிறது.

தங்களுக்குள் உள்ள பகைமை குடும்பத்தின் ஒற்றுமையையும் அமைதியையும் பாதிக்காமல் இருப்பதை உறுதிச் செய்ய, திருமணமாகிப் புகுந்த வீட்டிற்கு வந்தவுடன் கவிதாவும் சவிதாவும் ஒருவருக்கொருவர் சார்ந்த விஷயங்களில் குறுக்கிடக் கூடாது என்று ஒப்பந்தம் செய்துக் கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

இருப்பினும், சூழ்நிலைகள் அவர்களை ஒருவருக்கொருவர் மோத வைக்கின்றன. இதனால், தனி வீட்டிற்குக் குடிப்பெயர இருவரும் தங்கள் கணவர்களைச் சம்மதிக்கச் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களின் குடும்ப வணிகத்திற்கு ஓர் அச்சுறுத்தல் ஏற்படும்போது விஷயங்கள் தலைகீழாக மாறுகின்றன. கவிதாவும் சவிதாவும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து அச்சுறுத்தலில் இருந்து வணிகத்தைக் காப்பாற்றுவார்களா அல்லது இன்னும் பகைமையுடன் செயல்படுவார்களா என்பதுதான் கதையின் மையக்கருவாகும்.

அதனை அறிய, ஜெயஸ்ரீ விஜயன், கோமளா நாயுடு, கிளேட்டன் ராஜேந்திரன், புவேந்திரா, திவியா ரதி மற்றும் பலர் நடித்துள்ள 16 அத்தியாயக் கவிதா சவிதா தொடரைக் காணுங்கள். ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை முதல் ஒளிபரப்புக் காணும் கவிதா சவிதா தொடரின் புதிய அத்தியாயங்களை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.

ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99-இலிருந்து கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.