*புதிய அம்சங்கள் மற்றும் பிரத்தியேகச் சலுகைகளுடன் சூகா நான்கு ஆண்டுகள் வளர்ச்சியைக் கொண்டாடுகிறது
கோலாலம்பூர் – மலேசியாவின் முன்னணி பதிவிறக்கச் (ஸ்ட்ரீமிங்) சேவையான ஆஸ்ட்ரோவின் சூகா, தொழில்நுட்ப மேம்பாடுகள், வாடிக்கையாளர் வெகுமதிகள் மற்றும் வரையறுக்கப்பட்டக் காலச் சலுகைகள் உள்ளிட்டத் தொடர்ச்சியான அற்புதமான அறிவிப்புகளுடன் அதன் 4-வது
ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது.
உள்ளூர் ஆர்வத்தையும் கலாச்சாரத்தையும்
பிரதிபலிக்கும் பொருத்தமான, ஈடுபாட்டுடன் கூடிய உள்ளடக்கம் மூலம் நான்கு ஆண்டுகாலப் புதுமை, பயனர் மையப்படுத்தப்பட்ட மேம்பாடு, மலேசியர்களுடனான ஆழமானத் தொடர்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்குத் தளமாகச் சூகாவின் நிலையை இந்த மைல்கல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.