கோலாலம்பூர் – மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம், பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ, மே 26, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் தனது விண்மீன் பிரத்யேகத் தொடரான ஹவுஸ் கணவன் மூலம் சமூக நலன் சார்ந்தத் தலைப்புகளில் ஒன்றான ஆரோக்கியமானத் திருமண வாழ்க்கையின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறது.
வேலை செய்து சுயக் காலில் நிற்க வேண்டும் என்பது உள்ளிட்டப் பல லட்சியங்களைக் கொண்டிருந்தாலும் மிகப் பழமையானக் கூறுகளைப் பின்பற்றும் தனது மாமியார் அரசியின் கடுமையான எதிர்பார்ப்புகளால் சவால்களை எதிர்கொள்ளும் அமுதாவை இந்தக் கதை மையமாகக் கொண்டுள்ளது.
அமுதாவின் கணவர் சிவா, கணவனாகவும் மகனாகவும் தனதுப் பாத்திரங்களின் பொறுப்புகளைச் சமமாக வகிக்கப் போராடுகிறார். அமுதாவின் கனவுகளையும் குறிக்கோள்களையும் ஆதரிக்க விரும்பினாலும், சில நேரங்களில் தனது தாயை எதிர்த்துச் செயல்படத் தயங்குகிறார். கணவன்-மனைவியான அஞ்சலி- விஷ்ணு, புதிய அண்டை வீட்டாராக அடுத்த வீட்டில் குடிபெயரும்போது, அமுதா – சிவாவின் வாழ்க்கையில் எதிர்பாராதத் திருப்பங்கள் ஏற்படுகின்றன.
தனதுச் சுய விருப்பத்தினால் இல்லத்தரசனாக இருக்கும் விஷ்ணு, அஞ்சலியின் நோய்வாய்ப்பட்டத் தாயாரை மென்மையாகப் பராமரிப்பதன் மூலமும், மனைவியின் தொழிலுக்கு அவர் அளிக்கும் அசைக்க முடியாத ஆதரவின் மூலமும் அமுதாவின் பாராட்டைப் பெறுவதோடு அமுதாவின் சிந்தனையையும் தூண்டுகிறார். விஷ்ணுவைப் போலவே, வீட்டில் அதிகப் பொறுப்புகளை ஏற்கச் சிவாவை ஊக்குவிப்பதன் மூலம் அவரிடம் மாற்றங்களைக் கொண்டுவர அமுதா எடுக்கும் முயற்சிகளும் அவர்களுக்கிடையிலான மாறுபட்ட எதிர்பார்ப்புகளும் குடும்பத்திற்குள் ஆழமானப் பதட்டங்களுக்கு வழிவகுக்கிறது. ஒரு தொழிலில் சேர்ந்து நிதி ரீதியாகச் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்ற, அமுதா சமூக-குடும்ப விதிமுறைகளை மீறுவாரா? குழப்பங்கள், மோதல்கள் மற்றும் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், சிவாவை வீட்டில் மிகவும் பொறுப்பான நபராகவும் தனக்கு ஆதரவு வழங்குபவராகவும் மாற்றுவதில் அமுதா வெற்றி அடைவாரா?
விருது வென்றத் திரைப்படத் தயாரிப்பாளர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கித் தயாரித்த இந்த மனதைக் கவரும் தொடரில், சி. குமரேசன், கிருத்திகா கயல், சசிகுமார், நித்யா ஸ்ரீ, கோகிலா, பவிதிராஜ்ஸ், குபேன், கபில் உள்ளிட்டப் பலப் புகழ்பெற்ற உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர்.
உங்களில் எழும் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க, இதயப்பூர்வமானக் கதைசொல்லல் மற்றும் தொடர்புடையத் தருணங்களை உறுதியளிக்கும் 28-அத்தியாயங்கள் கொண்ட உள்ளூர் தமிழ் குடும்ப நாடகமான ஹவுஸ் கணவன் தொடரை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட், சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.
ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99*-இலிருந்துக் கிடைக்கும். எளிதான பதிவிறக்கம் (ஸ்ட்ரீமிங்), முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99* கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
*விலைகள் வரியை உள்ளடக்கவில்லை. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.