Home உலகம் காசா தாக்குதலில் ஒரே குடும்பத்தின் 9 குழந்தைகள் பலியான கொடூரம்!

காசா தாக்குதலில் ஒரே குடும்பத்தின் 9 குழந்தைகள் பலியான கொடூரம்!

63
0
SHARE
Ad

டெல் அவிவ்: டாக்டர் அலா அல்-நஜ்ஜார் என்ற பெண்மணி வெள்ளிக்கிழமை, மே 23-ஆம் தேதியன்று தனது பத்து குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, தென் காசாவில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிக்குச் சென்றிருக்கிறார்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரின் ஏழு குழந்தைகளின் உடல்கள் – அவர்களில் பெரும்பாலானோர் மோசமாக எரிந்த நிலையில் – மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அவர்கள் டாக்டர் நஜ்ஜாரின் சொந்தக் குழந்தைகள். அவரது குடும்பத்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்தாக்குதலில் அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்டன. அவரது மற்ற இரு குழந்தைகள் – 7 மாத குழந்தை மற்றும் இரண்டு வயது குழந்தை – வீட்டின் இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளனர்.

அவரது பத்து குழந்தைகளில் ஒருவர் மட்டும் – மிக மோசமான காயங்களுடன் – உயிர் பிழைத்துள்ளார். டாக்டர் நஜ்ஜாரின் கணவரும் ஒரு மருத்துவர். அவரும் இந்த தாக்குதலில் மிக மோசமாக காயமடைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

பல சந்தேகத் தீவிரவாதிகளைக் குறிவைத்து வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட பொதுமக்களில் மேற்குறிப்பிட்ட குடும்பத்தின் குழந்தைகளும் அடங்குவர்.