சென்னை : ஞாயிற்றுக்கிழமை (மே 11) சென்னையிலுள்ள நேரு உள்அரங்கில் நடைபெற்ற ஸீ தொலைக்காட்சியின் ‘சரிகமப’ லிட்டல் சேம்ப்ஸ் (Little Champs) என்னும் 14 வயதுக்கும் குறைவான வயது கொண்டவர்களுக்கான பாடல் போட்டியில் மலேசியாவிலிருந்து ஹேமித்ரா கலந்து கொண்டு மலேசியாவின் பெருமையை அகில உலகுக்கும் எடுத்துக் காட்டியிருந்தார்.
இறுதிச் சுற்றுக்கு 6 பேர் தேர்வான நிலையில், அதில் முதலாவதாகத் தேர்வு பெற்றவர் ஹேமித்ரா. இதன் மூலம் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
நேற்று இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் ஹேமித்ரா 3-வது பரிசைப் பெற்றார். பழைய பாடல்களை இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பாடி இரசிகர்களைக் கவர்ந்த திவினேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
#TamilSchoolmychoice
இரண்டாவது பரிசை யோகஸ்ரீ பெற்றார். இந்தப் போட்டி நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். சந்தானம், ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் இந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் கலந்து சிறப்பித்தனர்.