Home கலை உலகம் ஆஸ்ட்ரோவின் ‘Jaguh Rakan Muda’ நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோவின் ‘Jaguh Rakan Muda’ நிகழ்ச்சி

516
0
SHARE
Ad

கேபிஎஸ் & ஆஸ்ட்ரோ மலேசிய இளைஞர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் Jaguh Rakan Muda-ஐ அறிமுகப்படுத்தியது

கோலாலம்பூர் – மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு வழங்குநரான ஆஸ்ட்ரோ, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் (KBS) இணைந்து, மலேசிய இளைஞர்களின் வலிமை, தைரியம் மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் ஒரு புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான Jaguh Rakan Muda-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

உடல் மற்றும் மன ரீதியிலானச் சோதனைகள் மூலம் புதியத் தலைமுறையினரை அவர்களின் வரம்புகளுக்குத் தள்ளுவதன் வழி அவர்களைச் சவாலுக்கு ஏற்றவாறு உயர்த்துவதையும், அவர்களின் மீள்தன்மைக், குழுப்பணி மற்றும் உறுதியை வெளிப்படுத்துவதையும் நோக்கமாக இந்தத் துணிச்சலான உடல் ரீதியிலான ரியாலிட்டி போட்டிக் கொண்டுள்ளது. ஆற்றல் மற்றும் உணர்ச்சி நிறைந்த Jaguh Rakan Muda, நவம்பர் 10, 2025 முதல் ஒளிபரப்பாகிறது.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 9:00 மணிக்கு ஆஸ்ட்ரோ ரியா (அலைவரிசை 104)-இல், இரவு 9:30 மணிக்கு ஆஸ்ட்ரோ AEC (அலைவரிசை 306)-இல் மற்றும் இரவு 11:30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் ஒளிபரப்பாகிறது. அத்தியாயங்கள் ஆஸ்ட்ரோ கோ மற்றும் சூகாவிலும் ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கும்.

அதன் மையத்தில், Jaguh Rakan Muda என்பது மலேசிய இளைஞர்கள் தங்களைச் சவால் செய்ய, வளர, மற்றும் Rakan Muda திட்டத்தின் பத்து வாழ்க்கை முறைக் கூறுகளான ஜனநாயகம் (Rakan Demokrasi), மோட்டார் விளையாட்டு (Rakan Litar), சுறுசுறுப்பான வாழ்க்கை முறைச் (Rakan Aktif), சுற்றுச்சூழல் (Rakan Bumi), மின்னியல் (Rakan Digital), வெளிப்பாடு (Rakan Ekspresi), இசை (Rakan Muzik), திறன்கள் (Rakan Mahir), தொழில்முனைவோர் (Rakan Niaga), மற்றும் பராமரிப்பு மற்றும் நலன்புரி (Rakan Prihatin) மூலம் தங்கள் திறனை வெளிப்படுத்த ஒரு தளமாகும்.

இந்தத் தொடர், மலேசியர்களை ஊக்குவிக்கவும் ஒன்றிணைக்கவும் தைரியம், குழுப்பணி மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் பங்கேற்பாளர்களைக் காண்பிப்பதன் மூலம், நமது இளைஞர்களைக் கொண்டாடும் உள்நாட்டு உள்ளடக்கத்திற்கான ஆஸ்ட்ரோவின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

மலேசியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், மாண்புமிகு ஹன்னா யோ கூறுகையில், “இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நம்பிக்கையுடனும், திறமையுடனும், தலைமைத் தாங்கத் தயாராகவும் இருக்கும் இளம் மலேசியர்களின் தலைமுறையை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கு அர்த்தமுள்ளப் பங்களிப்பை வழங்கும் ஒரு துடிப்பான மற்றும் மீள்தன்மைக் கொண்ட இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். Jaguh Rakan Muda என்பது அந்தத் தொலைநோக்குப் பார்வையை உயிர்ப்பிக்கும் பல வழிகளில் ஒன்றாகும் – 10 Rakan Muda வாழ்க்கை முறைகள் மூலம் இளைஞர்கள் தங்களைத் தாங்களேச் சவால் செய்து கொள்ளவும், தங்கள் தலைமைத்துவத்தை வலுப்படுத்தவும், குழுப்பணியை வளர்க்கவும் வாய்ப்புகளை வழங்குகிறது. நமது இளைஞர்களின் வலிமைப், படைப்பாற்றல் மற்றும் ஆற்றலை எடுத்துக்காட்டும் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் மூலம் இந்த முயற்சியைப் பெருக்குவதில் ஆஸ்ட்ரோவின் ஆதரவை நாங்கள் மதிக்கிறோம். மலேசியாவின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் எதிர்காலத் தலைவர்களை வளர்ப்பதை நாங்கள் ஒன்றாக நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.

ஆஸ்ட்ரோவின் தலைமை உள்ளடக்க அதிகாரி, அக்னஸ் ரோசாரியோ கூறுகையில், “மலேசியர்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கத்தை உருவாக்குவதில்தான் ஆஸ்ட்ரோவின் நோக்கம் உள்ளது. பல்வேறுச் சமூகங்களில் நேர்மறையான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அசல், உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். Jaguh Rakan Muda ஒரு சிறந்த எடுத்துக்காட்டு – மலேசிய இளைஞர்கள் தங்கள் வரம்புகளைத் தாண்டிச் சென்று, உண்மையானச், சக்தி வாய்ந்தக் கதைகள் மூலம் மற்றவர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பை வழங்கும் ஈர்க்கக்கூடியப் பொழுதுபோக்கு வடிவத்தில் ஒரு நிகழ்ச்சி. இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடனான எங்கள் ஒத்துழைப்பு, அடுத்தத் தலைமுறையை மேம்படுத்தும் தேசிய முயற்சிகளை ஆதரிப்பதில் ஆஸ்ட்ரோவின் பங்கை வலுப்படுத்துகிறது, மேலும் நாடு முழுவதும் அர்த்தமுள்ளத் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

வடக்கு (பினாங்கு), மத்திய (கோலாலம்பூர்), கிழக்கு கடற்கரை (திரங்கானு) மற்றும் கிழக்கு மலேசியா (சபா & சரவாக்) ஆகிய 5 மண்டலங்களில் நடத்தப்பட்ட நாடு தழுவியத் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட Jaguh Rakan Muda, மாணவர்கள், உடற்பயிற்சிப் பயிற்றுனர்கள், அழகுப் போட்டியாளர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள், பாரா-தடகள வீரர்கள் மற்றும் பணிபுரியும் வல்லுநர்கள் உட்படப் பல்வேறுப் பின்னணிகளைச் சேர்ந்த 13 முதல் 30 வயதுடைய மலேசிய இளைஞர்களை ஒன்றிணைக்கிறது.

போட்டியாளர்கள் தங்கள் சகிப்புத்தன்மைத், தலைமைத்துவம் மற்றும் உணர்ச்சி வலிமையைச் சோதிக்கும் கடுமையான உடல் மற்றும் மன ரீதியிலானச் சவால்களை எதிர்கொள்வார்கள். ஒரு தேசிய ரியாலிட்டி நிகழ்ச்சியாக, இது இளம் ஹீரோக்களைக் கண்டுபிடித்துத், தைரியம் மற்றும் குழுப்பணியின் கதைகள் மூலம் பார்வையாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெற்றிப் பெறும் அணி Jaguh Rakan Muda என்றப் பட்டத்தைப் பெறும். மேலும் ரிம 100,000 ரொக்கப் பரிசையும் வெல்லும்.

2019 தென்கிழக்கு ஆசியா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்ற பிரபலமானத் தொலைக்காட்சி ஆளுமையும், தேசியத் தடகள வீரருமான மாட் ரெத்தோ Jaguh Rakan Muda நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்.

அவருடன் வர்ணனையாளர்களாக ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவரும் தேசியப் பூப்பந்து நட்சத்திரமுமான (ஐகானுமான) கோ லியு யிங் மற்றும் நிகழ்ச்சிக்குத் தனது வர்த்தக முத்திரை ஆற்றலையும் கவர்ச்சியையும் கொண்டு வரும் ஐன் எட்ரூஸ் ஆகியோர் இணைகின்றனர். தொடர் முழுவதும் இடம்பெறும் விருந்தினர் வர்ணனையாளர்களான இன்டான் செரா, பாங் மெட், கியூ ஹைதார் மற்றும் டெனேஸ் குமார் ஆகியோர் போட்டிக்குத் தனித்துவமானக் கண்ணோட்டங்களை வழங்குவர்.

Jaguh Rakan Muda, நவம்பர் 10, 2025 முதல் ஒளிபரப்பாகிறது, ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 9:00 மணிக்கு ஆஸ்ட்ரோ ரியா (அலைவரிசை 104)-இல், இரவு 9:30 மணிக்கு ஆஸ்ட்ரோ AEC (அலைவரிசை 306)-இல் மற்றும் இரவு 11:30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் ஒளிபரப்பாகிறது. அத்தியாயங்கள் ஆஸ்ட்ரோ கோ மற்றும் சூகாவிலும் ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கும்.

முழுக் குடும்பத்திற்கும் எளிதான ஸ்ட்ரீமிங் மற்றும் முடிவற்றப் பொழுதுபோக்கிற்காக ஆஸ்ட்ரோ ஒன் என்டர்டெயின்மென்ட் தொகுப்பை மாதம் ரிம49.99 கட்டணம் செலுத்திச் சந்தாதாரராகுங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள் அல்லது 03-95433838 என்ற எண்ணுக்குப் புலனம் செய்தி அனுப்புங்கள். அதற்குப் பதிலாக ஸ்ட்ரீமிங்கை விரும்புகிறீர்களா?

சூகா என்டர்டெயின்மென்ட்+ திட்டத்தை மாதம் வெறும் ரிம24.60க்குப் பெறுங்கள், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைக் காண உங்களுக்கு அணுகலை வழங்குகிறது.