
4ஆம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு – 2026 – ஜூலை 2, 3, 4 & 5 – 2026 | சென்னை, தமிழ்நாடு இந்தியா.
வரும் 2026ஆண்டு , ஜூலை மாதம் 3, 4, 5 தேதிகளில் இந்தியாவில் சென்னை அண்ணா நூலகத்தில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டை உலகத் தமிழ்க் கல்விக் கழகம் நடத்த உள்ளது.
உலகத் தமிழ்க் கல்விக் கழகம்
அமெரிக்கா வாழ் குறிப்பாக கலிஃபோர்னியா வாழ் தமிழர்களின் பிள்ளைகள் தாய்மொழியான தமிழைப் பண்பாட்டு சூழலில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு கலிபோர்னியா தமிழ்க் கல்விக் கழகம் 1998 ல் துவக்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளர் திருவாட்டி வெற்றி செல்வி அவர்கள் மலேசியாவில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளார். அவருடன் மலேசியக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான திரு. முத்து நெடுமாறன், சி.ம இளந்தமிழ் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்வர்.
இச்சந்திப்பு பின்வருமாறு நடைப்பெறும்:
காலம்: 09.11.2025, ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10
களம்: தமிழ் அறவாரிய செயலகம்.
Tamil Foundation
8C, Jalan PJS 1/46,
Taman Petaling Utama,
46150 Petaling Jaya, Selangor
Phone: +603 – 7955 3578
இம்மாநாட்டில் கலந்து கொண்டு பங்களிப்பதற்காக மலேசியாவில் இருந்து 30 பேர் கொண்ட மலேசிய குழுவினர் தமிழ்நாடு செல்லவிருக்கின்றனர்.
ஊடக நண்பர்கள் ஆக்கம் தரும் இம்மாநாடு தொடர்பான செய்திகள் குறித்து தெரிந்து கொள்வதற்கும் தொடர்ந்து, ஊடகங்களில் வெளியிடுவதற்கும் ஊடகவியலாளர்களை ஏற்பாட்டாளர்கள் சார்பில் சி.ம.இளந்தமிழ் அன்புடன் அழைக்கின்றார்.
தொடர்புக்கு : சி.ம.இளந்தமிழ். +6012-3143910





