
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் செங்கோட்டையன், அமமுக தலைவர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், ஆகியோருடன் கலந்து கொண்டார்.
அந்த சம்பவம் சர்ச்சையான நிலையில், சசிகலாவை அவர்கள் சந்தித்ததும் ஊடகங்களில் செய்தியானது.
அதைத் தொடர்ந்து கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக செங்கோட்டையனை இன்று அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசியலில் இன்னொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.





