
கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியில் வெடித்திருக்கும் தலைமைத்துவப் போராட்டத்தைத் தொடர்ந்து கட்சித் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினைத் தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்றும் நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) முஹிடின் யாசின் தனது இல்லத்தில் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
அதே வேளையில் அவரின் இல்லத்தின் முன்னால் அவரைப் பதவி விலகச் சொல்லி பெர்சாத்து கட்சியினர் சிலர் ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஹிடின் யாசின் பதவி விலக முன்வந்தால், அவருக்குப் பதிலாக டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் எனக் கருதப்படுகிறது. அவருக்கும் நடப்பு தலைமைச் செயலாளர் அஸ்மின் அலிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





