Home நாடு பெர்லிஸ்: புதிய மந்திரிபெசார் பெர்சாத்து கட்சியின் அபு பாக்கார் ஹாம்சா

பெர்லிஸ்: புதிய மந்திரிபெசார் பெர்சாத்து கட்சியின் அபு பாக்கார் ஹாம்சா

504
0
SHARE
Ad
அபு பாக்கார் ஹாம்சா

கங்கார்: பெர்லிசில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகளைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பெர்சாத்து கட்சியின் அபு பாக்கார் ஹாம்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோலபெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினரான அவர் பெர்லிஸ் ஆட்சியாளர் துவாங்கு சைட் சிராஜூடின் ஜமாலுலாய்ல் முன்னிலையில் நேற்று மாலை 4.00 மணிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

கடந்த வாரம் பாஸ் கட்சியின் சார்பில் மந்திரிபெசாராக இருந்த ஷூக்ரி ராம்லி உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய மந்திரிபெசார் நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

பதவி விலகிய ஷூக்ரி ராம்லிக்கு எதிராக சில சட்டமன்ற உறுப்பினர்கள் சில நகர்வுகளில் ஈடுபட்டதாலும் அவர் பதவி விலக வேண்டிய நெருக்கடி எழுந்தது.

ஷூக்ரி ராம்லிக்கு எதிராக நடந்து கொண்ட மூன்று பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை அந்தக் கட்சி அதிரடியாக நீக்கியது. இதைத் தொடர்ந்து அந்த 3 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

அந்த மூவரும் தற்போது புதிய மந்திரிபெசாருக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.

பெர்லிஸ் சட்டமன்றத்தில் பெர்சாத்து 5 உறுப்பினர்களையும், பாஸ் 6 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. 15 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது பெர்லிஸ் சட்டமன்றம். ஆட்சியமைக்க 8 பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை.