Home இந்தியா மத்திய அமைச்சரவை மாற்றம்: சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 பேர் பதவியேற்றனர்

மத்திய அமைச்சரவை மாற்றம்: சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 பேர் பதவியேற்றனர்

942
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூன் 18- பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராக தொடங்கி விட்டது.

தேர்தல் பணிகளை தொய்வின்றி செய்வதற்காக காங்கிரஸ் நிர்வாகக் குழுவை நேற்று மாற்றி அமைத்தனர். 42 பேர் காங்கிரஸ் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த ஜனார்த்தன் திவேதி நீக்கப்பட்டு புதிய செய்தித் தொடர்பாளராக அஜய் மக்கான் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகள் அனைவரும் காலை 9.15 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்துப் பேசினார்கள். அப்போது ராகுல்காந்தியும் உடன் இருந்தார்.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் புதிய நிர்வாகிகளில் 80 சதவீதம் பேர் ராகுல்காந்திக்கு மிக, மிக நெருக்கமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கட்சி நிர்வாக அமைப்பு ராகுல்காந்தி கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது.

இந்த நிலையில் மத்திய மந்திரிசபை இன்று மாலை 5.30 மணி அளவில் மாற்றம் செய்யப்பட்டது. புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ராஜஸ்தான் மூத்த காங்கிரஸ் தலைவர் சிஸ் ராம் ஓலா (தொழிலாளர் நலம்), ஆஸ்கர் பெர்னாண்டஸ் (சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள்), கிரிஜா வியாஸ் (வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு), கே.எஸ்.ராவ் (ஜவுளி) ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பொறுப்பேற்றனர்.

மாணிக் ராவ் (சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்), சந்தோஷ் சவுத்ரி (சுகாதாரம் மற்றும் குடும்பநலம்), சுதர்சன நாச்சியப்பன் (வணிகம் மற்றும் தொழில்), ஜெ.டி.சீலம் (நிதி) ஆகியோர் இணை மந்திரிகளாக பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தொழிலாளர் நல மந்திரியாக இருந்த மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் முதல்-மந்திரியாக விரும்பினார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். எனவே அவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த இலாகாவான ரெயில்வே இலாகா இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.