ஆஸ்லோ, பிப்.5- பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்ததால் தலிபான்களால் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய், அந்நாட்டு பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர். தலிபான்களால் பெண்களின் கல்வி உரிமை மறுக்கப்படுவதாக, அவர் இணைய தளத்தில் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த தலிபான்கள் கடந்த ஆண்டு அவரை துப்பாக்கியால் சுட்டனர்.
படுகாயமுற்ற அவர் பிரிட்டனில் சிகிச்சை பெற்று, உடல் நலம் தேறி வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு மலாலாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. நார்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலாலா பெயரை நோபல் பரிசுக்கு முன் மொழிந்துள்ளனர்.