Home உலகம் மூன்றாவது அணுச் சோதனை : வடகொரியா எச்சரிக்கை

மூன்றாவது அணுச் சோதனை : வடகொரியா எச்சரிக்கை

581
0
SHARE
Ad

northkorea_rocketஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் கடுமையாக்கப்பட்டதற்கான பதில் நடவடிக்கையாக தாம் மூன்றாவது அணுச் சோதனையையும், மேலும் ராக்கட் சோதனைகளையும் செய்யப்போவதாக வடகொரியா கூறியுள்ளது.

அமெரிக்காவை மனதில் வைத்தே இந்தச் சோதனைகள் செய்யப்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

பலத்தின் மூலம் மாத்திரமே அமெரிக்காவை கையாள முடியும் என்றும் அது கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த மாதம் வடகொரியா ஒரு நீண்ட தூர ராக்கட்டை பரிசோதித்ததற்கான பதில் நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வடகொரியாவின் பல கம்பனிகள் மற்றும் ஏஜென்சிகளை இலக்கு வைத்து தடைகளை விதித்தது.

ஒரு அணு ஆயுதத்தை சோதனை செய்வது ஒரு தவறு என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அனைத்து தரப்பும் பொறுமை காக்க வேண்டும் என்றும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்யக் கூடாது என்றும் சீனா கூறியுள்ளது.