Home இந்தியா இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக்குழு அனுமதி

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக்குழு அனுமதி

520
0
SHARE
Ad

ImageVaultHandler.aspx

அக் 31-இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதியாகிவிட்டது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நேற்று கூடிய காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்ட்டது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இதில் காமன்வெல்த் மாநாட்டை பல நாடுகள் தொடர்புடைய சர்வதேச விவகாரமாக அணுக வேண்டுமென்றும், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயுள்ள பிரச்சனையாக கருதக்ககூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சர்வதேச விவகாரங்களில் இந்தியாவிற்கென உள்ள கொள்கைகளை கடைபிடிக்க வேண்டுமென்பதற்காக பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில் எவ்வித ஆட்டேபனையும் இல்லை என்று காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலுமாக புறக்ணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியிறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.