Home தொழில் நுட்பம் சாம்சுங்கின் கேலக்ஸி நோட் 4 வெளியானது!

சாம்சுங்கின் கேலக்ஸி நோட் 4 வெளியானது!

566
0
SHARE
Ad

Samsung-Galaxy-Note-4கோலாலம்பூர், செப்டம்பர் 4 – சாம்சுங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் திறன்பேசிகளின் அடுத்த தயாரிப்பான கேலக்ஸி நோட் 4 திறன்பேசியினை நேற்று அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அண்டிரோய்டு இயங்குத்தளத்தை கொண்ட ‘நோட் எட்ஜ்’ (Note Edge) திறன்பேசிகள் மற்றும் ‘மெய்நிகர்’ (virtual-reality) ஒலிக்கருவிகளையும் வெளியிட்டுள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங் தனது வெற்றிகரமான கேலக்ஸி தொடர் திறன்பேசிகளின் அடுத்த தயாரிப்பினை மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 9-ம் தேதி போட்டி நிறுவனமான ஆப்பிள் தனது அடுத்த தயாரிப்பு ஐபோன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படும் நிலையில், சாம்சுங் தனது தயாரிப்பினை வெளியிட்டுள்ளது.

அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள கேலக்ஸி நோட் 4 மற்றும் நோட் எட்ஜ் திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள் பற்றி கூறப்படுவதாவது:-

#TamilSchoolmychoice

வழக்கமான கேலக்ஸி திறன்பேசிகளை காட்டிலும் பக்கவாட்டில் சற்றே வளைந்த திரையினை  நோட் எட்ஜ் திறன்பேசிகள் கொண்டுள்ளன. வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல், வளைந்த பகுதியில் குறுந்தகவல் அறிவிப்புகளை காண்பது, பங்கு வர்த்தக பயன்பாடுகள் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து உள்ளார்ந்த அம்சங்களும் இரு திறன்பேசிகளில் ஒன்றாகவே உள்ளன.

அண்டிரோய்டு 4.4 கிட்கேட் இயங்குத்தளத்தில் இயங்கக்கூடிய இந்த திறன்பேசிகள், அதி நவீன 2.7GHz குவாட் கோர் செயலியினைக் கொண்டுள்ளன. மிகப் பரிச்சயமான கைப்படம் (செல்ஃபி) வசதிக்காக முன்புறத்தில் 3.7 மெகா பிக்செல் கேமராவும், பின்புறத்தில் 16 மெகா பிக்செல் கேமராவும் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

அனைத்து சிறந்த தொழில்நுட்ப வசதிகள் மட்டுமல்லாது இதயத்துடிப்பை அளவீடும் அமைப்பு, கைரேகையை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம் போன்றவற்றையும் கொண்டுள்ளன.

இந்த திறன்பேசிகளின் விறபனையை எதிர்பார்த்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திறன்பேசிகள் சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தும் என சாம்சுங் நிறுவனம் கூறியுள்ளது.