Home Slider இந்திய மருத்துவ தாதி மரணம் : விசாரணை நடத்த ஆஸ்திரேலியா அரசு உத்தரவு

இந்திய மருத்துவ தாதி மரணம் : விசாரணை நடத்த ஆஸ்திரேலியா அரசு உத்தரவு

1152
0
SHARE
Ad

மெல்பேர்ன்,டிச.14 – இங்கிலாந்து நாட்டில் லண்டனிலுள்ள மன்னர் 7-வது எட்வர்டு மருத்துவமனையில் இந்திய மருத்துவ தாதி (நர்ஸ்) ஜெசிந்தா சால்தான்ஹா (வயது 46) பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு இளவரசர் வில்லியம்சின் மனைவி காத்தரின் இங்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது பற்றி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் செயல்படும் வானொலி நிலையம் டெலிபோனில் ஆள்மாறாட்டம் செய்து பேசி சில தகவல்களை சேகரித்து வெளியிட்டது.

இந்நிலையில் நர்ஸ் ஜெசிந்தா மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதற்கு ஆஸ்திரேலிய ரேடியோ நிலையத்தின் ஒலிபரப்பே காரணமாக அமைந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து வானொலி நிலையம் விசாரித்து வருவதாக கூறினாலும் அந்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை தங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டது. எனவே தகவல் தொடர்பு கண்காணிப்பு அதிகாரிகள் விரைவில் விசாரணை தொடங்குவார்கள்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிமையை மீறி செயல்பட்டதா? என்பது பற்றி விசாரிக்கப்படும். அது உண்மை என கண்டறியப்பட்டால் லைசென்சு ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.